Home Local news நாடு முழுவதிலும் 25 புதிய சதொச விற்பனை நிலையங்கள்

நாடு முழுவதிலும் 25 புதிய சதொச விற்பனை நிலையங்கள்

நாடு முழுவதிலும் சுமார் 25 புதிய சதொச விற்பனை நிலையங்கள் இன்றைய தினம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட உள்ளது. லங்கா சதொச நிறுவன வரலாற்றில் முதல் தடவையாக ஒரே நாளில் 25 விற்பனை நிலையங்கள் இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட உள்ளது.

சூரியவெவ, பதவிய, மூதூர், தமுத்தேகம, பெரலியகந்த, மின்னேரிய, பன்சல்கொடல்ல, மஹவ, தெல்தொட்ட, நாத்தன்டிய, ஹாரகம, தன்துரே, கரண்டுபான, பூண்டுலோயா, வெலிமட, வெல்லவாய, ரத்தினபுரி, அவிசாவெல்ல, வொக்ஷ்வல்வீதி, கொரலஇம, பின்கந்த, கலெய்கான, ஹபுகல மற்றும் ஹோமாகம ஆகிய நகரங்களில் புதிய விற்பனை நிலையங்கள் ஆரம்பிக்கப்பட உள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பதவிப் பிரமாண தினம் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் பிறந்த நாள் என்பனவற்றை முன்னிட்டு இவ்வாறு விற்பனை நிலையங்கள் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட உள்ளது.

வர்த்தக விவகார அமைச்சர் பந்துல குணவர்தனவின் எண்ணக்கருவிற்கு அமைய இந்த புதிய விற்பனை நிலையங்கள் இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட உள்ளது.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  பொருட்களை அதிகவிலைக்கு விற்றால் அழைக்கவும் 1977;
Previous articleஇன்றைய ராசி பலன் – 18.11.2021
Next articleஇலங்கையில் ஏன் தற்கொலை தாக்குதல் நடத்தினோம்? ஷஹ்ரான் கூறிய காரணம்