Home Astology இன்றைய ராசி பலன் – 17.11.2021

இன்றைய ராசி பலன் – 17.11.2021

பிலவ வருடம் கார்த்திகை 1ஆம் தேதி நவம்பர் 17,2021 புதன்கிழமை, திரயோதசி திதி காலை 9.50 மணி வரை அதன் பின் சதுர்த்தசி. சந்திரன் இன்று மேஷ ராசியில் பயணம் செய்கிறார். கன்னி ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்

சந்திரன் இன்றைய தினம் உங்க ராசியில் பயணம் செய்கிறார். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். இதுவரை இருந்த கடன் பிரச்சினைகள் தீரும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். இன்று பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். வியாபார ரீதியான வெளிவட்டார நட்பு கிடைக்கும்.

ரிஷபம்

சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு விரைய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறால் சுப விரைய செலவுகள் ஏற்படும். இன்று உங்களுக்கு எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட காலதாமதமாகும். அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகளால் தொழிலில் பல புதிய மாற்றங்கள் உண்டாகும். தேவையில்லாத செலவுகளால் கையிருப்பு குறையும். பணபற்றாக்குறையை சமாளிக்க சிக்கனத்தை கடைப்பிடிப்பது நல்லது.

மிதுனம்

சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் எந்த செயலையும் மன தைரியத்தோடு செய்து முடிப்பீர்கள். உங்களின் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும்.

READ MORE >>>  இன்றைய ராசிபலன் - 19/07/2020

கடகம்

சந்திரன் இன்றைய தினம் தொழில் ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். வேலையில் உற்சாகமாக செயல்படுவீர்கள். இன்று நீங்கள் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் செயல்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். சுபகாரியங்கள் கைகூடி வரும்.

சிம்மம்

சந்திரன் இன்றைய தினம் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. இன்றைய தினம் உங்கள் உடல்நிலையில் சிறு ஆரோக்கிய குறைபாடுகள் வந்து நீங்கும். குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.தொழிலில் வேலையாட்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றத்தை காணலாம்.

கன்னி

சந்திரன் இன்றைய தினம் எட்டாம் வீடான அஷ்டம ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வேலைப்பளு அதிகமாகும். மன அழுத்தமாக உணர்வீர்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மற்றவர்களிடம் கடன் வாங்குவதையோ அல்லது கடன் கொடுப்பதையோ தவிர்ப்பது நல்லது. இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். அமைதியாக இருப்பது நல்லது.

துலாம்

சந்திரன் இன்று ஏழாம் வீடான களத்திர ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். கணவன் மனைவி இடையே கலகலப்பு அதிகமாகும். இன்று குடும்பத்தில் சுப செய்திகள் தேடி வரும். பெற்றோர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள். நினைத்த காரியம் கைகூடும்.

விருச்சிகம்

சந்திரன் இன்றைய தினம் ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். பணம் கடன் கிடைக்கும். வங்கி கடனுக்கு முயற்சி செய்யலாம். உடன் பிறந்தவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். இன்று உறவினர்கள் வருகையால் இல்லத்தில் இனிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பழைய நண்பர்களின் சந்திப்பால் மன மகிழச்சி அதிகரிக்கும். வியாபார ரீதியாக வெளியூர் பயணம் செல்வீர்கள்.

READ MORE >>>  இன்றைய ராசிபலன் - 04/11/2021, துலாம் ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்

தனுசு

சந்திரன் இன்று உங்க ராசிக்கு ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். இன்று நீங்கள் செய்யும் காரியங்கள் மற்றவர்கள் தலையீட்டால் தடைப்படலாம். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். வேலையில் பொறுமையுடன் நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

மகரம்

சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். வேலைப்பளு அதிகமாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. எதிர்பார்த்த இடத்தலிருந்து உதவி தேடி வரும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இன்று குடும்பத்தில் பெண்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். உத்தியோக ரீதியாக செல்லும் பயணங்களில் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திடீர் மருத்துவ செலவுகள் வரும். கையிருப்பு குறையும்.

கும்பம்

சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். தொழிலில் இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். பிள்ளைகள் வழியில் சுப செலவுகள் தேடி வரும்.உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் நன்மைகள் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள்.

மீனம்

சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு இரண்டாம் வீடான குடும்ப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பணவரவு அதிகமாகும். எதிர்பாராத உதவிகள் தேடி வரும். இன்று நீங்கள் திட்டமிட்ட காரியத்தை செய்து முடிக்க சிறு சிறு இடையூறுகள் ஏற்படலாம். வண்டி வாகன பராமரிப்பிற்காக சிறு தொகை செலவு செய்வீர்கள்.

READ MORE >>>  இன்றைய ராசிபலன் - 06/05/2021, கடக ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்

ஏனைய தளங்களிற்கு செல்ல..

Previous articleஎண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மூடப்பட்டமைக்கு அமைச்சர் கம்மன்பிலவே காரணம்
Next articleகஞ்சா செய்கையின் ஊடாக நாட்டின் கடனை அடைக்க முடியும்: டயனா கமகே