Home Local news சீன உர கப்பலால் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லையாம்!

சீன உர கப்பலால் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லையாம்!

சீன உரக்கப்பலால் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை. அக்கப்பலில் ஆயுதங்கள் அல்லது போதைப்பொருள் உள்ளிட்டவை காணப்படுவதாக இதுவரையில் எவரும் தெரிவிக்கவில்லை. நீதிமன்ற தீர்ப்பை எதிர்பார்த்துள்ளமையின் காரணமாகவே சீனக் கப்பல் திரும்பிச் செல்லாமலுள்ளது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

இன்று (16) செவ்வாய்கிழமை இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர்களாக டலஸ் அழகப்பெரும மற்றும் உதய கம்மன்பில  ஆகியோர் இதனைத் தெரிவித்தனர்.

                                 ஹிப்போ ஸ்பிரிட் ‘ கப்பல்

அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவிக்கையில் , சீன இரசாயன உரக்கப்பல் பிரச்சினையால் இலங்கை – சீனாவுக்கிடையில் எவ்வித இராஜதந்திர முரண்பாடும் ஏற்படாது. இது தொடர்பில் விவசாய அமைச்சின் செயலாளர் மிகவும் தெளிவாக கருத்துக்களை வெளியிட்டுள்ளார். எனினும் நாம் கடன் சான்று பத்திரத்தை விடுவித்துள்ளமையால் இவ்விடயத்தில் தொழிநுட்ப சிக்கல்கள் காணப்படுகின்றன.

இந்த சிக்கலுக்கான தீர்வு காணப்படும் வரை மாத்திரமே கப்பல் இலங்கையில் தரித்துள்ளதே தவிர , வேறெந்த நோக்கத்துக்காகவும் கிடையாது. குறித்த உரத்தை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பெறப்போவதில்லை என்றும் விவசாயத்துறை அமைச்சர் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இது ஒரு ஆயுதக் கப்பல் இல்லை என்பதால் அச்சுறுத்தல் எதுவும் கிடையாது என்றார்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  யாழில் கொரோனா தொற்றாளர்களின் உயிரிழப்பு 100ஐ நெருங்கியது
Previous articleஎதிர்வரும் 19ஆம் திகதி நிகழும் நீண்ட சந்திர கிரகணம்: 600 ஆண்டுகளில் இதுவே முதல் முறை!
Next article‘ஜெய்பீம்’ : ராஜாகண்ணுவின் மனைவிக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க முடிவு – நடிகர் சூர்யா