Home Local news இளம் கவிஞர் அஹ்னாப் ஜஸீமிடம் குற்றப்பகிர்வுப் பத்திரம் கையளிப்பு!

இளம் கவிஞர் அஹ்னாப் ஜஸீமிடம் குற்றப்பகிர்வுப் பத்திரம் கையளிப்பு!

‘நவரசம்” என்ற கவிதைத் தொகுப்பு நூலை எழுதியமைக்காக கைது செய்யப்பட்டுள்ள அஹ்னாப் ஜஸீம் எனும் இளம் கவிஞர், ஆசிரியருக்கு குற்றப் பகிர்வுப் பத்திரம் கையளிக்கப்ப்ட்டது.

புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி நயோமி விக்ரமசிங்கவின் முன்னிலையில் இந்த குற்றப் பத்திரிகை கையளிக்கப்பட்டுள்ளது. கொழும்பு விளக்கமறியல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அஹ்னாப் ஜஸீம், நேற்று (16) பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் புத்தளம் மேல் நீதிமன்ருக்கு அழைத்து வரப்பட்டார். கைதின் பின்னர் அஹ்னாப் ஜஸீம் நீதிமன்றம் ஒன்றின் முன்னிலையில் நேரடியாக ஆஜர் செய்யப்படும் முதல் சந்தர்ப்பமாக இது கருதப்படுகிறது. இதனையடுத்தே அவருக்கு இந்த குற்றப் பத்திரிகை கையளிக்கப்பட்டது.

பயங்கரவாத தடை சட்டத்தின் 2 (1) ஏ பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் ஒன்றினை புரிந்துள்ளதாக அஹ்னாப் ஜஸீம் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த குற்றப் பத்திரம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நேற்று முதல் தடவையாக விசாரணைக்கு வந்தபோது, குற்றம் சுமத்தப்பட்டுள்ள கவிஞர், ஆசிரியர் அஹ்னாப் ஜஸீமுக்காக சிரேஷ்ட சட்டத்தரணி சஞ்சய வில்சன் ஜயசேகரவின் தலைமையில், சட்டத்தரனிகளன நுஹ்மான், ஸ்வஸ்திகா அருலிங்கம், ஜயந்த தெஹி அத்தகே, ஏ. சஜான், ஹுஸ்னி ராஜிஹ் உள்ளிட்டவர்கள் ஆஜராகினர்.

வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபருக்காக அரச சட்டவாதி உதார கருணாரத்ன ஆஜரானார்.

குற்றப் பத்திரிகை கையளிக்கப்பட்ட பின்னர், பிரதிவாதி அஹ்னாபுக்காக நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி வில்சன் ஜயசேகர, தனது சேவை பெறுநர் தமிழ் மொழியை பயன்படுத்துபவர் என்பதால் குற்றப் பத்திரிகை தமிழ் மொழியில் அமைந்திருப்பது சிறந்தது என சுட்டிக்காட்டினார்.

READ MORE >>>  யாழில் சீனி மூடையை திருடியவர் சிக்கினார்

இதற்குப் பதிலளித்த அரச சட்டவாதி உதார கருணாரத்ன, குற்றப் பத்திரிகையில் தமிழ் பிரதியும் உள்ளடங்குவதாக குறிப்பிட்டதுடன், அதன் பின்னர் அது பரீட்சிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டது.

அதனையடுத்து விசேட கோரிக்கையை முன்வைத்த சட்டத்தரணி வில்சன் ஜயசேகர, தனது சேவை பெறுநருக்கு பிணை வழங்குவது தொடர்பில் சட்ட மா அதிபரின் இணக்கத்தைப்பெற தேவையான எழுத்து மூல கோரிக்கையை சட்ட மா அதிபருக்கு முன்வைத்துள்ள நிலையில், அவரின் நிலைப்பாட்டை நீதிமன்றுக்கு தெரிவிக்கும் முகமாக குறுகிய கால அவகாசம் ஒன்றை வழங்க கோரினார்.

இதனையடுத்து அது தொடர்பில் விளக்கிய அரச சட்டவாதி உதார கருணாரத்ன, கடந்த 12 ஆம் திகதி வெள்ளியன்றே, பிரதிவாதியின் சட்டத்தரணி குறித்த எழுத்துமூல கோரிக்கையை முன்வைத்துள்ளதாகவும், நேற்று 15 ஆம் திகதிக்குள் அது தொடர்பில் சட்ட மா அதிபரால் தனது நிலைப்பாட்டை அறிவிக்க கால அவகாசம் இருக்கவில்லை எனவும் தெரிவித்தார். அதனால் பிரதிவாதியின் சட்டத்தரணி கோருவதைப் போல பிறிதொரு தினத்தை நீதிமன்றம் அளித்தால், அந்த திகதியில் பிரதிவாதிக்கு பிணையளிப்பது தொடர்பிலான சட்ட மா அதிபரின் நிலைப்பாட்டை கூறத் தயார் என தெரிவித்தார்.

இதனையடுத்து சட்ட மா அதிபரின் நிலைப்பாட்டை அறிவிக்க, வழக்கை எதிர்வரும் டிசம்பர் 15 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்த நீதிமன்றம், அன்றைய தினம் வழக்கை விசாரணைக்கு எடுக்கும் திகதிகள் தொடர்பிலும் தீர்மானிக்கப்படும் என அறிவித்தது.

அத்துடன் பிரதிவாதி அஹ்னாப் ஜஸீமின் கைவிரல் ரேகை பதிவுகளைப் பெற உத்தரவிட்ட நீதிமன்றம், அடுத்த தவணையின்போது பிரதிவாதியை நீதிமன்றில் ஆஜர் செய்ய சிறைச்சாலை அத்தியட்சகருக்கும் பணித்தது.

READ MORE >>>  நீதிமன்ற வழக்கிற்கு வந்தவரின் மோட்டார் சைக்கிளை திருடியவர் சிக்கினார்

ஏனைய தளங்களிற்கு செல்ல..

Previous articleமாடு பால் கறக்க மறுப்பதாக பொலிஸில் புகார்
Next articleஎதிர்வரும் 19ஆம் திகதி நிகழும் நீண்ட சந்திர கிரகணம்: 600 ஆண்டுகளில் இதுவே முதல் முறை!