Home world news 16 மாதங்களில் 21 குழந்தைகளைப் பெற்ற தம்பதி!

16 மாதங்களில் 21 குழந்தைகளைப் பெற்ற தம்பதி!

ஜோர்ஜியா நாட்டில் வசிக்கும் ஒரு தம்பதியினர் வாடகைத் தாய்மார்கள் மூலம் 2 வருடங்களில் 21 வ1 குழந்கைளைப் பெற்றுள்ளனர்.

24 வயதான கிறிஸ்டினா ஒஸ்துர்க் மற்றும் 57 வயதான அவரின் கணவர் காலிப் ஒஸ்துர்க் ஆகியோர் இக்குழ்நதைகளைப் பெறுவதற்காக  195,000 டொலர்களை (சுமார் 4 கோடி ரூபா) வாடகைத் தாய்மார்களுக்கு செலுத்தியுள்ளனர்.

2020 மார்ச் முதல் 2021 ஜூலை வரையான காலத்தில் அதாவது 16 மாத காலத்தில ;மேற்படி 21 குழந்தைகளும் வாடகைத் தாய்மார்கள் மூலம் பிறந்துள்ளன.

மேற்படி 21 குழந்தைகளில் மூத்த குழந்தைககு 19 மாத வயதாகுகிறது. மிக இளைய குழந்தைக்கு 3 மாத வயதாகுகிறது.

இக்குழந்தைகளை வளர்ப்பதற்காக 16 பணிப்பெண்களை இவர்கள் நியமித்துள்ளனர். இதற்காக  வருடாந்தம் சுமார் 1.8 கோடி ரூபாவை இவர்கள் செலவிடுகின்றனராம். 24 வயதான கிறிஸ்டினா ரஷ்யாயாவின் மொஸ்கோ நகரைச் சேர்ந்தவர். விடுமுறைக்காக ஜோர்ஜியாவுக்கு வந்தபோது, கரையோர உல்லாச நகரான பச்சுமியில், ஹோட்டல் தொழிற்துறை கோடீஸ்வர வர்த்தகரான காலிப் ஒஸ்துர்க்கை சந்தித்தார்.  அதற்கு முன்னரே இவர்கள் இருவரும் திருமணமாக விவாரத்து செய்திருந்தனர்.

கிறிஸ்டினாவுக்கு முந்தைய திருமணம் மூலம் 6 வயதான ஒரு பெண் குழந்தை இருந்தது. காலிப்புக்கு 9 முந்தைய திருமணம் மூலம் 9 பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் தற்போது இவர்கள் இருவரும் வாடகைத் தாய்மார் மூலம் பெற்ற 21 குழந்தைகளுடன் மொத்தமாக 23 குழந்தைகள் அவ்வீட்டில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. இத்தம்பதியனருக்கு மொத்தமாக 31 பிள்ளைகள் உள்ளனர்.

மேற்படி 21 குழந்தைகளின் பெயர்களும் வயதுகளும் முறையே முஸ்தபா 19 மாதங்கள், மரியம் 18 மாதங்கள், ஆர்யன் 18 மாதங்கள், அலீசா மாதங்கள், ஹசன் 17 மாதங்கள், ஜூடி 17 மாதங்கள், ஹார்பர் 16 மாதங்கள், தெரேசா 16 மாதங்கள், ஹுசெய்ன் 16 மாதங்கள், அனா 15 மாதங்கள், இஸபெல்லா 15 மாதங்கள், இஸ்மாயில்  14 மாதங்கள், மெஹ்மெத் 14 மாதங்கள், அஹமத் 14 மாதங்கள், அலி 13 மாதங்கள், கிறிஸ்டினா 13 மாதங்கள், சாரா ஒரு வருடம்;, லோக்மன் ஒரு வருடம், காலிப் 11 மாதங்கள், ஓலிவியா 9 மாதங்கள், ஜுடி 3 மாதங்கள் ஆகும்.

READ MORE >>>  பாரிஸில் தமிழர்கள் வாழும் பகுதியில் நடந்த கொடூரம் - மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி!

தானும் தனது கணவரும் இணைந்து 105 பிள்ளைகளைப் பெற வேண்டும் என தான் விரும்புதாக கிறிஸ்டினா ஒர்துக் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

Previous articleதடை செய்யப்பட்ட கிருமி நாசினிகளுடன் அக்குறணையைச் சேர்ந்த ஒருவர் கைது!
Next articleஒவ்வொரு இலங்கை குடிமகனும் 9லட்சத்து 50ஆயிரம் ரூபாவுக்கு அடகு வைக்கப்பட்டுள்ளனர்.