Home Local news யாழ் – கொழும்பு ரயில் சேவைகள் நிறுத்தம்!

யாழ் – கொழும்பு ரயில் சேவைகள் நிறுத்தம்!

யாழ்ப்பாணம் – கொழும்பு இடையிலான ரயில் சேவைகள் இன்று இடை நிறுத்தப்படுவதாக ரயில் திணைக்கள பொதுமுகாமையாளர் அறிவித்துள்ளார்.

அதன்படி வடமாகாணத்திற்கான அனைத்து தொடருந்து சேவைகளும் இன்று இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கொழும்பு – காங்கேசன்துறை இடையே இன்று மூன்று தொடருந்து சேவைகள் இடம்பெறவிருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நாட்டில் பெய்த அடைமழை காரணமாக விஜய ரஜதஹன மற்றும் மீரிகமை ரயில் நிலையங்களுக்கு இடையில், வெள்ளம் காரணமாக ரயில் பாதையில் தாழிறக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ரயில் பாதையை சீர்செய்ய பராமரிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் அப் பணி நிறைவடையும் வரை, பிரதான பாதையிலான தொடருந்து சேவைகள், கொழும்பு கோட்டையிலிருந்து வியாங்கொடை ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  நாடளாவிய ரீதியில் மின்சார துண்டிப்பு தொடரும்
Previous articleயாழில் வங்கியில் உயிரிழந்த முதியவரால் பரபரப்பு
Next articleமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்திகளை பகிர்ந்த நபருக்கு நேர்ந்த கதி!