Home Accident News கிளிநொச்சியில் பாதசாரி கடவையைக் கடக்க முற்பட்ட மாணவிக்கு நேர்ந்த கதி

கிளிநொச்சியில் பாதசாரி கடவையைக் கடக்க முற்பட்ட மாணவிக்கு நேர்ந்த கதி

கிளிநொச்சி ஊற்றுப்புலம் கிராமத்திலிருந்து கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்கு உயர்தர அனுமதி பெறுவதற்காக சென்றிருந்த மாணவிகள் இருவர் விபத்தில் சிக்கிய நிலையில் அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சியில் பாதசாரி கடவை ஊடாக மாணவிகள் வீதியை கடக்க முயற்சித்தபோது வீதியால் வந்த இரு வாகனங்கள் உடனடியாக வாகனத்தை நிறுத்திய நிலையில், கட்டுப்பாடற்ற வேகத்தில் பயணித்த இ.போ.ச பேருந்து நிறுத்தியிருந்து இரு வாகனங்கள் மீதும் மோதியுள்ளது.

இதனால் தள்ளப்பட்ட வாகனங்கள் மாணவிகள் மீது மோதியதில் மாணவி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் தி.மதுசாளினி (வயது16) என்ற மாணவி உயிரிழந்துள்ளதுடன் ச.கீர்த்தனா (வயது16) என்ற மாணவி படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

கிளிநொச்சி ஊற்றுப்புலம் பாடசாலையில் க.பொ.த சாதாரண தரம் கல்வி கற்ற மாணவிகள் மூவர் உயர்தரம் கல்விக்காக கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு அனுமதி பெறுவதற்காக பாடசாலைக்கு வருகை தந்த நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

ஏ9 வீதியில் மேற்கு பக்கத்திலிருந்து பாடசாலை பக்கமாக மஞ்சள் கடவையில் வீதியை கடக்க முற்பட்ட போது ஏ9 வீதியில் பயணித்த பட்டா ரக வாகனம் மாணவிகள் கடந்து செல்வதற்காக நிறுத்தியது.

அதன் பின் வந்த மின்சார சபை ஒப்பந்ததாரருடைய ஹன்ரர் ரக வாகனமும் நிறுத்தியிருந்த போதுபின்னால் வந்த இலங்கை போக்கு வரத்து சபையின் பேருந்து ஹன்ரர் ரக வாகனத்தை மோதியதி்ல் ஹன்ரர் வாகனம் பட்டாவுடன் மோதி குறித்த வாகனங்கள் இரண்டும் மாணவிகளுடன் மோதியுள்ளது.

READ MORE >>>  இலவச குடிநீர் இணைப்பு வழங்குவதற்கான நடமாடும் சேவை:

இதன் போது சம்பவ இடத்திலயே திருவாசகம் மதுசாளினி (வயது 16 ) என்ற மாணவி இறந்ததுடன் மற்றொரு மாணவி காயமடைந்துள்ளார். சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலீஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை உயிரிழந்த மாணவியின் தந்தை துவிச்சக்கர வண்டியில் நாளாந்தம் ஊற்றுப்புலத்திலிருந்து கிளிநொச்சி விறகு வெட்டி விற்பனை செய்யும் தொழிலாளியாவார்.

அவர் மிகவும் வறுமைக்குட்பட்ட நிலையில் தனது மகளைக் கற்பித்து, உயர்தரத்திற்கு அனுப்பிய நிலையில் முதல் நாளே மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது.

Gallery Gallery

ஏனைய தளங்களிற்கு செல்ல..

Previous articleவெளிநாட்டில் சாதனைபடைத்த தமிழ் மாணவி
Next articleயாழில் வங்கியில் உயிரிழந்த முதியவரால் பரபரப்பு