Home Tamil News வெளிநாட்டில் சாதனைபடைத்த தமிழ் மாணவி

வெளிநாட்டில் சாதனைபடைத்த தமிழ் மாணவி

இத்தாலி – பலெர்மோ நகரில் அமைந்துள்ள பலெர்மோவில் Universita degli Studi di Palermo பல்கலைக்கழகத்தில் ( பொருளாதார வளர்ச்சி மற்றும் சர்வதேச ஒத்துழைப்புத்துறைக்காக நடைபெற்ற தேர்வில் வெற்றி பெற்று தமிழ் மாணவியொருவர் சாதனை படைத்துள்ளார்.

இத்தாலி – பலெர்மோ நகரில் கடந்த 3 தசாப்தங்களாக வாழ்ந்து வரும் யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பைச் சேர்ந்தவரான பாலசிங்கம் வினுசா என்ற மாணவியே இவ்வாறு சாதனை படைத்துள்ளார்.

இவர் பல்கலைக்கழக தேர்வில் மொத்தமாக எடுக்க வேண்டிய 110 புள்ளிகளில் 109 புள்ளிகளைப் பெற்று சிறந்த மாணவியாக தெரிவாகியுள்ளார்.

இவருக்கான சிறப்பு பட்டமளிப்பையும், மதிப்பளித்தலை Prof. Lo Verde Massimo, Prof.ssa Perra Alessandra, Prof. Simon Fabrizio, Prof. Asmundo Adam, ஆகியோர் வழங்கி கௌரவித்துள்ளனர்.

பட்டமளிப்பில் கலந்துக்கொண்ட பல நூறு மாணவர்களில் தமிழ் மாணவியொருவர் சிறப்பு பட்டத்தை பெற்றுக்கொண்டமை அங்கு வாழும் தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளதுடன்,பலரும் மாணவிக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Gallery

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  மனைவியை காணவில்லை; கண்டுபிடித்துத்தருமாறு கணவன் புகார்!
Previous articleஇன்றைய ராசி பலன் – 15.11.2021
Next articleகிளிநொச்சியில் பாதசாரி கடவையைக் கடக்க முற்பட்ட மாணவிக்கு நேர்ந்த கதி