Home Astology இன்றைய ராசி பலன் – 15.11.2021

இன்றைய ராசி பலன் – 15.11.2021

பிலவ வருடம் ஐப்பசி 29ஆம் தேதி நவம்பர் 15,2021 திங்கட்கிழமை திதி: ஏகாதசி திதி காலை 06.40 மணி வரை அதன் பின் துவாதசி திதி. உத்திரட்டாதி நட்சத்திரம் மாலை 06.09மணி வரை அதன் பின் ரேவதி. சந்திரன் இன்றைய தினம் மீனம் ராசியில் பயணம் செய்கிறார். சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைக்கு பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்

சந்திரன் 12ஆம் வீடான விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். தொழிலில் ஓரளவு முன்னேற்றம் உண்டாகும். பெரிய மனிதர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்தால் மட்டுமே வெற்றி காண முடியும். வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைக்கும்.

ரிஷபம்

சந்திரன் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் இருந்த தொல்லைகள் குறையும். இன்று உங்களுக்கு எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள்.

மிதுனம்

சந்திரன் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுடைய வீட்டில் சுப நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகள் பெருமை சேர்க்கும் வகையில் நடந்து கொள்வார்கள். உத்தியோகஸ்தர்கள் வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று மனம் ஆனந்தப்படுவார்கள். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பழைய கடன்கள் வசூலாகும். செயல்களில் நிதானம் தேவை.

READ MORE >>>  இன்றைய ராசி பலன் - 02.12.2021

கடகம்

சந்திரன் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று பிள்ளைகளால் ஏற்பட்ட மன உளைச்சல் நீங்கும். பணவரவு அதிகரிக்கும். வீண் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் சந்திப்பு வெற்றியைத் தரும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். கடன் பிரச்சினைகள் நீங்கும் செல்வாக்கு அதிகரிக்கும்.

சிம்மம்

சந்திரன் உங்களுடைய ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதையும் செய்யாமல் இருப்பது நல்லது. இன்று நீங்கள் மன உளைச்சலுடன் காணப்படுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிக்கல்கள் ஏற்படும். மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது பிரச்சினையை குறைக்கும்.

கன்னி

சந்திரன் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுடைய வீட்டில் பிள்ளைகளால் சுபசெலவுகள் ஏற்படும். நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த உதவிகள் வீடு தேடி வரும். சந்திரன் உங்கள் ராசியை பார்வையிடுவதால் நல்ல வாய்ப்புகள் வீடு தேடி வரும். வேலை தேடுபவர்களுக்கு வெளியூரில் இருந்து புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த எதிர்ப்புகள் விலகி வருமானம் பெருகும்.

துலாம்

சந்திரன் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். கடன் பிரச்சினைகள் நீங்கும். தொழிலில் பணியாட்களின் ஒத்துழைப்போடு எதிர்பார்த்த லாபங்களை அடைவீர்கள். உறவினர்கள் வழியிலும் அனுகூலம் உண்டாகும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை அமோகமாக இருக்கும். பிள்ளைகளிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும்.

READ MORE >>>  குருப்பெயர்ச்சி பலன்கள்- தனுசு ராசி

விருச்சிகம்

சந்திரன் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் ஆரோக்கிய ரீதியாக மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உறவினர்கள் உதவியால் பொருளாதார நெருக்கடிகள் குறையும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை அதிகரிக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். பிள்ளைகளால் சுப செலவுகள் அதிகரிக்கும்.

தனுசு

சந்திரன் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். வியாபாரத்தில் எதிர்பாராத திடீர் விரயங்கள் ஏற்படலாம். மன நிம்மதி குறையும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும்.

மகரம்

சந்திரன் உங்களுடைய ராசிக்கு மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் இருக்கும். பெண்கள் புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். கடன் பிரச்சினைகள் தீரும். பங்குச்சந்தையில் செய்யும் முயற்சிகளில் லாபம் அதிகரிக்கும். வங்கி சேமிப்பு உயரும்.

கும்பம்

சந்திரன் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் எல்லாம் வெற்றி அடைய உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளால் குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் ஏற்படும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். வேலை தொழிலில் இருப்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும்.

READ MORE >>>  சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு

மீனம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசியில் பயணம் செய்கிறார். இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமையும் சந்தோஷமும் அதிகரிக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியைத் தரும். வேலை விசயமாக சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு வீடு தேடி வரும். சுப செலவுகள் செய்வீர்கள்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

Previous articleஹேக்கரை கண்டுபிடித்தால் 74 கோடி ரூபாய் சன்மானம்!
Next articleவெளிநாட்டில் சாதனைபடைத்த தமிழ் மாணவி