Home Astology குருப்பெயர்ச்சி பலன்கள்- கும்ப ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- கும்ப ராசி

சந்தர்ப்பம் வரும்போது சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சொல்லும் கும்ப ராசி நேயர்களே! ஜென்மத்தில் வந்தது குரு பகவான்; சிந்தித்து செயல்பட்டால் வெற்றியுண்டு! பன்னிரண்டு ராசிகளுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்- கும்ப ராசி 13-11-2021 முதல் 12-11-2022 வரை

குருப்பெயர்ச்சி பலன்கள்- கும்ப ராசி

இதுவரை உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த குரு பகவான் 13.11.2021 அன்று உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கப் போகின்றார். தன லாபாதிபதியான குரு பகவான் ராசியில் சஞ்சரிக்கும் பொழுது பொருளாதாரத்தில் நிறைவு ஏற்பட்டாலும் மனநிம்மதி குறைவாகவே இருக்கும்.

காரணம், ‘ஜென்ம குரு, ஜென்ம ராமர் வனத்திலே’ என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கின்றது. அதாவது, ‘ராமபிரான் வனவாசம் சென்றபொழுது அவருக்கு ஜென்மத்திற்கு குரு வந்தது’ என்று சொல்வார்கள்.

அதற்காக நீங்கள் பயப்பட வேண்டியதில்லை. உங்களைப் பொறுத்தவரை தொழிலில் எந்தப்பாதிப்பும் ஏற்படாது. ஆனால் வரவைக் காட்டிலும் செலவு கூடுதலாக இருக்கும். மருத்துவச் செலவுகளும் மனநிம்மதிக் குறைவும் உருவாகலாம். எனவே எதைச் செய்தாலும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது.

குருவின் பார்வை பலன்

இந்தக் குருப்பெயர்ச்சியின் விளைவாக குரு பகவான் உங்கள் ராசிக்கு 5, 7, 9 ஆகிய மூன்று இடங்களையும் பார்க்கப் போகின்றார். எனவே அந்த மூன்று இடங்களும் புனிதமடைகின்றன.

அவற்றிற்குரிய ஆதிபத்யங்கள் மிகச் சிறப்பாக நடைபெறும். குறிப்பாக 5-ம் இடத்தை குரு பார்ப்பதால் பூர்வ புண்ணிய ஸ்தானம் பலம் பெறுகின்றது. எனவே இதுவரை முயற்சி செய்தும் முடிவடையாத காரியங்கள் இப்பொழுது முடிவடையும்.

READ MORE >>>  இன்றைய ராசி பலன் - 04.12.2021

உறவினர்களோடு இருந்த கருத்து வேறுபாடு அகலும். புத்திர ஸ்தானமாகவும் 5-ம் இடம் கருதப்படுவதால் பிள்ளைகள் வழியில் நல்ல தகவல் வரலாம்.

அவர்களின் எதிர்கால நலன் கருதிப் புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். கல்யாணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படும்.

குருவின் பார்வை 7-ம் இடத்தில் பதிவதால் களத்திர ஸ்தானம் புனிதமடைகின்றது. எனவே இதுவரை பேசிப் பேசி விட்டுப்போன வரன்கள் இப்பொழுது முடிவாகலாம். மங்கல ஓசை மனையில் கேட்பதற்கான வழிபிறக்கும்.

குருவின் பார்வை 9-ம் இடத்தில் பதிவதால் பாக்கிய ஸ்தானம் பலம் பெறுகின்றது. எனவே கூட்டு முயற்சியில் இருந்து விலகி தனித்து இயங்கலாமா என்று சிந்திப்பீர்கள் என்றைக்கோ வாங்கிப் போட்ட இடம் இன்றைக்கு பலமடங்கு விலை உயர்ந்து மகிழ்ச்சியைத் தரும்.

நட்சத்திர பாதசாரப்படி பலன்கள்

செவ்வாய் சாரத்தில் குரு சஞ்சாரம்(13.11.2021 முதல் 12.12.2021 வரை)

உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். எனவே தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.

துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். வாடகைக் கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி வெற்றி தரும்.

ராகு சாரத்தில் குரு சஞ்சாரம்(13.12.2021 முதல் 1.3.2022 வரை)

உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் சுக ஸ்தானத்தில் ராகு பகவான் சஞ்சரிக்கின்றார். அவர் சஞ்சரிக்கும் வீடு சுக்ரனது வீடாகும். எனவே பெண்வழிப் பிரச்சினைகள் அகலும்.

புதிய இல்லம் கட்டிக் குடியேற வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. அடகு வைத்த நகைகளை மீட்டுக் கொண்டு வரும் சூழ்நிலை உருவாகும்.

READ MORE >>>  இன்றைய ராசி பலன் - 27.11.2021
சுய சாரத்தில் குரு சஞ்சாரம்(2.3.2022 முதல் 13.4.2022 வரை)

குரு உங்கள் ராசிக்கு 2, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியாவதால் தனது சுய சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது நன்மைகளைச் செய்யும். குடும்ப முன்னேற்றம் கூடுதலாக இருக்கும். கொடுக்கல்-வாங்கல்கள் ஒழுங்காகும். கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவீர்கள்.

ராகு-கேது பெயர்ச்சிக் காலம்

குருப்பெயர்ச்சி காலத்தில் 21.3.2022 ல் ராகு-கேது பெயர்ச்சி நிகழவிருக்கின்றது. இதுவரை உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த ராகு பகவான் இப்பொழுது 3-ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகின்றார்.

அதே நேரத்தில் 10-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த கேதுபகவான் 9-ம் இடத்திற்கு மாறப்போகின்றார். இதன் விளைவாக உடன்பிறப்புகளோடு கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். உடல்நலத்திலும் கவனம் தேவை.

சிறப்பு வழிபாடு

இல்லத்துப் பூஜை அறையில் பட்டாபிஷேக ராமர் படம் வைத்து, விஷ்ணு கவசம் பாடி வழிபடுவது நல்லது.

மேலும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாத்தூர் ஐநூற்றீஸ்வரர் ஆலயத்தில் உள்ள மாப்பிள்ளை நந்தி, மகிழ மரத்தடி முனீஸ்வரர், சுவாமி, அம்மன், குரு தட்சிணாமூர்த்தி ஆகியவற்றை அனுகூல நாளில் சென்று வழிபட்டு வந்தால் அனைத்து யோகங்களும் வந்து சேரும்.

செவ்வாய் – சனி பார்வை மற்றும் சேர்க்கை
13.11.2021 முதல் 6.12.2021 வரை செவ்வாய்-சனி பார்வைக்காலம்:
26.2.2022 முதல் 6.4.2022 வரை மகரத்தில் செவ்வாய்-சனி சேர்க்கைக் காலம்:

இக்காலத்தில் மிக மிக கவனத்தோடு செயல்பட வேண்டிய நேரமாகும். முரண்பாடான கிரகங்களின் பார்வையும், சேர்க்கையும் இருக்கும் பொழுது உடல் ஆரோக்கியத் தொல்லைகள் ஏற்படும்.

READ MORE >>>  இன்றைய ராசிபலன் - 11.08.2021

உறவினர் பகை அதிகரிக்கும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காது. உத்தியோகத்திலிருந்து ஒருசிலரைப் பணிநீக்கம் செய்யும் சூழ்நிலை கூட உருவாகலாம்.

கொடுக்கல்-வாங்கல்களில் ஏமாற்றங்களைச் சந்திக்க நேரிடும். எதைச் செய்தாலும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்ய வேண்டிய நேரமிது.

பெண்களுக்கான பலன்கள்

கும்ப ராசியில் பிறந்த பெண்களுக்குப் பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்பட விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.

ஏழரைச் சனி நடைபெறுவதால் எதிலும் கவனம் தேவை. . பிள்ளைகளுக்கான சுபகாரியங்கள் நடைபெறும். பணிபுரியும் பெண்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். அனுமன் வழிபாடு ஆனந்தம் வழங்கும்

பன்னிரண்டு ராசிகளுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்- 13-11-2021 முதல் 12-11-2022 வரை

குருப்பெயர்ச்சி பலன்கள் – மேஷ ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- ரிஷப ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- மிதுன ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- கடக ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- சிம்ம ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- கன்னி ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- துலாம் ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- விருச்சிக ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- தனுசு ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- மகர ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- கும்ப ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- மீன ராசி

புத்தாண்டு பலன்கள் – கும்ப ராசி

ஏனைய தளங்களிற்கு செல்ல..

Previous articleவவுனியா தமிழ் பாடசாலையொன்றில் 10 மாணவர்களிற்கு கொரோனா!
Next articleகுருப்பெயர்ச்சி பலன்கள்- மகர ராசி