Home Astology குருப்பெயர்ச்சி பலன்கள்- மகர ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- மகர ராசி

தனது இன்ப துன்பங்களை மனதிற்குள்ளேயே வைத்திருக்கும் மகர ராசி நேயர்களே! இரண்டில் வந்தது குரு பகவான்; எதிர்காலம் இனி நலமாகும் பன்னிரண்டு ராசிகளுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்- மகர ராசி 13-11-2021 முதல் 12-11-2022 வரை

குருப்பெயர்ச்சி பலன்கள்- மகர ராசி

இதுவரை உங்கள் ராசியிலேயே சஞ்சரித்து வந்த குரு பகவான், 13.11.2021 முதல் தன ஸ்தானம் எனப்படுகின்ற 2-ம் இடத்திற்கு வருகின்றார். அதே நேரத்தில், ஏழரைச் சனியில் ஜென்மச் சனியின் ஆதிக்கமும் இருக்கின்றது.

எனவே, ஒருபுறம் உங்களுக்கு பணம் வந்தாலும், மற்றொரு புறம் உங்களுக்கு விரயங்களே அதிகரிக்கும். 2-வது சுற்று சனியின் ஆதிக்கம் நடப்பவர்களுக்கு ‘பொங்கு சனி’ என்பதால் அதன் கடுமை கொஞ்சம் குறையும்.

இப் பொழுது பெயர்ச்சியாகி இருக்கும் குருபகவான் வாக்கு, தனம், குடும்பம் ஆகியவற்றைக் குறிக்கும் இடத்தில் சஞ்சரிக்கின்றார். எனவே பொருளாதார பற்றாக்குறை அகலும்.

புதிய பாதை புலப்படும். கொடுக்கல்-வாங்கல்களில் இருந்த பிரச்சினைகள் படிப்படியாகத் தீரும். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும்.

குருவின் பார்வை பலன்

இந்த குருப்பெயர்ச்சியின் விளைவாக உங்கள் ராசிக்கு 6, 8, 10 ஆகிய இடங்களை குருபகவான் பார்க்கின்றார். அவரது பார்வை பதியும் ராசிகள் எல்லாம் புனிதமடையும் என்பதால், அந்த மூன்று இடங்களுக்குரிய பலன்கள் அனைத்தும் சிறப்பாக நடைபெறும்.

குருவின் பார்வை 6-ம் இடத்தில் பதிவதால் எதிர்ப்புகள் கட்டுக்குள் அடங்கிஇருக்கும். பகை பாராட்டிய உறவினர்கள் இனி பாசத்தோடு பழகுவர்.

உடல் ஆரோக்கியத்திற்கு என்று ஒரு தொகையைச் செலவழித்து வந்த நீங்கள் இனி மருத்துவச் செலவுகள் குறைந்து மகிழ்ச்சியடையப் போகிறீர்கள்.

READ MORE >>>  இன்றைய ராசி பலன் - 20.11.2021

குருவின் பார்வை 8-ம் இடத்தில் பதிவதால் இழப்புகளை ஈடுசெய்ய எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். பிள்ளைகள் வழியில் நல்ல தகவல் வரலாம். அவர்களுக்கு வேலை கிடைத்து அதன் மூலம் உதிரி வருமானங்கள் வந்து சேரலாம்.

தீவிர முயற்சி செய்தும் இதுவரை முடியாத காரியங்கள் இப்பொழுது முடிவடையும். குருவின் பார்வை 10-ம் இடத்தில் பதிவதால் தொழில் வளம் சிறப்பாக இருக்கும்.

என்றாலும், ஜென்மச் சனியின் ஆதிக்கம் இருப்பதால் இடையிடையே கூட்டாளிகளால் பிரச்சினைகள் ஏற்படலாம். இருப்பினும் நீங்கள் விழிப்புணர்ச்சியோடு இருப்பது நல்லது.

நட்சத்திர பாதசாரப்படி பலன்கள்

செவ்வாய் சாரத்தில் குரு சஞ்சாரம்(13.11.2021 முதல் 12.12.2021 வரை)

உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். எனவே சுக லாபாதிபதியான செவ்வாய் காலில் குரு பகவான் சஞ்சரிக்கும் பொழுது நற் பலன்களே வந்து சேரும்.

பொதுவாக சகோதர ஒற்றுமை பலப்படும். வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல் வரலாம். பணிபுரியும் இடத்தில் பாராட்டும், புகழும் கூடும். பிள்ளைகளின் மேற்படிப்பு சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். இளைய சகோதரத்தோடு இருந்த பகை மாறும்.

ராகு சாரத்தில் குரு சஞ்சாரம்(13.12.2021 முதல் 1.3.2022 வரை)

உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் ராகு பகவான் சஞ்சரிக்கின்றார். அவர் சஞ்சரிக்கும் வீடு சுக்ரனின் வீடாகும். ராகு சுயபலமற்ற கிரகம் என்பதால் அந்த ஸ்தானாதிபதிக்குரிய பலன்களை வழங்குவார்.

அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது பிள்ளைகளால் பெருமை வந்து சேரும் நேரமிது. உங்கள் குணமறிந்து குழந்தைகள் நடந்து கொள்வர். பெண்வழிப் பிரச்சினைகள் அகலும்.

READ MORE >>>  குருப்பெயர்ச்சி பலன்கள் - மேஷ ராசி

அடகு வைத்த நகைகளை மீட்டுக் கொண்டுவரும் வாய்ப்பும் கிடைக்கும். சொத்து விற்பனையால் லாபம் உண்டு.

சுய சாரத்தில் குரு சஞ்சாரம்(2.3.2022 முதல் 13.4.2022 வரை)

குரு உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர். அவர் தனது சுய சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது மிக மிக கவனம் தேவை. வரவைக் காட்டிலும் செலவு கூடும். திடீர் திடீரென விரயங்கள் ஏற்பட்டு திகைக்க வைக்கும்.

ராகு-கேது பெயர்ச்சிக் காலம்

குருப்பெயா்ச்சிக் காலத்தில் 21.3.2022-ல் ராகு-கேது பெயர்ச்சியும் நிகழவிருக்கின்றது. இதுவரை 5-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த ராகு பகவான், இப்பொழுது சுக ஸ்தானம் எனப்படும் 4-ம் இடத்திற்கு மாறுகின்றார்.

11-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த கேது இப்போது 10-ம் இடத்திற்கு வருகிறார். இதன் விளைவாக ஆரோக்கியத் தொல்லைகள் அதிகரிக்கும். மருத்துவச் செலவுகள் கூடும். மனக்கசப்பு தரும் சம்பவங்கள் நடைபெறலாம்.

சிறப்பு வழிபாடு

இல்லத்து பூஜை அறையில் குரு படம் வைத்துக் குரு கவசம் பாடி வழிபடுவதோடு, தஞ்சை மாவட்டம் திட்டை ராஜகுருவை யோக பலம் பெற்ற நாளில் சென்று வழிபட்டு வந்தால் எண்ணங்கள் எளிதில் நிறைவேறும்.

செவ்வாய் – சனி பார்வை மற்றும் சேர்க்கை
13.11.2021 முதல் 6.12.2021 வரை செவ்வாய்-சனி பார்வைக் காலம்:
26.2.2022 முதல் 6.4.2022 வரை மகரத்தில் செவ்வாய்- சனி சேர்க்கைக் காலம்:

முரண்பாடான கிரகங்களின் பார்வையும், சேர்க்கையும் இருக்கும் இக்காலத்தில் முன்னேற்றத் தடைகள் அதிகரிக்கும். முக்கியப் புள்ளிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காது.

READ MORE >>>  இன்றைய ராசி பலன் - 30.11.2021

உத்தியோகத்தில் இருந்து ஒருசிலர் பணி நீக்கம் செய்யப்படுவர். குடும்பத்தில் குழப்பங்கள் அதிகரிக்கும். கொடுக்கல்-வாங்கல்களில் தடுமாற்றங்கள் ஏற்படும்.

உதவி செய்வதாகச் சொன்னவர்கள் கடைசி நேரத்தில் கையை விரிக்கலாம். என்ன இருந்தாலும் இதுபோன்ற காலங்களில் யோசித்துச் செயல்படுவதே நல்லது.

பெண்களுக்கான பலன்கள்

மகர ராசியில் பிறந்த பெண்களுக்கு தேவைக்கேற்ற பணம் தேடிவந்து சேரும். ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். கணவன்-மனைவிக்குள் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது.

பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி சிறிது செலவிடுவீர்கள். பணிபுரியும் பெண்களுக்கு திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்காது. புதிய வேலை வாய்ப்பை யோசித்து ஏற்றுக்கொள்வது நல்லது. சனிபகவான் வழிபாடு சந்தோஷத்தை வழங்கும்.

பன்னிரண்டு ராசிகளுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்- 13-11-2021 முதல் 12-11-2022 வரை

குருப்பெயர்ச்சி பலன்கள் – மேஷ ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- ரிஷப ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- மிதுன ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- கடக ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- சிம்ம ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- கன்னி ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- துலாம் ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- விருச்சிக ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- தனுசு ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- மகர ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- கும்ப ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- மீன ராசி

புத்தாண்டு பலன்கள் – மகர ராசி

ஏனைய தளங்களிற்கு செல்ல..

Previous articleகுருப்பெயர்ச்சி பலன்கள்- கும்ப ராசி
Next articleகுருப்பெயர்ச்சி பலன்கள்- தனுசு ராசி