Home Astology குருப்பெயர்ச்சி பலன்கள்- விருச்சிக ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- விருச்சிக ராசி

‘வெற்றி’ ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் விருச்சிக ராசி நேயர்களே! நாலில் வந்தது குருபகவான்; வாழ்வில் வசதிகள் இனிக்கூடும்! பன்னிரண்டு ராசிகளுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்- விருச்சிக ராசி 13-11-2021 முதல் 12-11-2022 வரை

குருப்பெயர்ச்சி பலன்கள்- விருச்சிக ராசி

இதுவரை உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த குருபகவான் 13.11.2021 முதல் நான்காமிடமான சுக ஸ்தானத்தில் அடியெடுத்து வைக்கின்றார். உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு பகவான்.

அர்த்தாஷ்டம குருவாக வந்தாலும் கூட பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதியான குரு, சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது அதன் பார்வை தொழில் ஸ்தானத்தில் பதிகிறது. இதனால், உங்களுக்கு தொழில் வளர்ச்சியும், திருப்தியான வருமானமும் வந்து சேரும்.

அரைகுறையாக நின்ற காரியங்கள் எல்லாம் இப்பொழுது துரிதமாக நடைபெறும். புதிய வாகனம் வாங்கும் யோகம், நிலம், பூமி வாங்கும் யோகம், வீடு கட்டும் முயற்சியில் வெற்றி போன்றவை ஏற்படும்.

சுபச்செலவுகள் அதிகரிக்கும். விட்டுப்போன ஒப்பந்தங்கள் மீண்டும் வந்து மகிழ்ச்சியடைய வைக்கும். மேலும் வளர்ச்சி காண, குரு கவசம் பாடி வியாழக்கிழமை தோறும் குரு பகவானை வழிபட்டு வருவது நல்லது.

குருவின் பார்வை பலன்

இந்தக் குருப்பெயா்ச்சியின் விளைவாக, குரு பகவான் உங்கள் ராசிக்கு 8, 10, 12 ஆகிய இடங்களைப் பார்க்கின்றார். குருவின் அருட்பார்வையால் தொட்டது துலங்கும். துணையாக இருக்கும் நண்பர்கள் தோள் கொடுத்து உதவுவர். வெற்றிக்குரிய தகவல்கள் வீடு வந்து சேரும்.

உற்றார், உறவினர்கள் உங்கள் முன்னேற்றம் கண்டு ஆச்சரியப்படப் போகிறார்கள். இப்பொழுது குருவின் பார்வை 8-ம் இடத்தில் பதிவதால் பணிபுரியும் இடத்தில் நல்லபெயர் கிடைக்கும். தொழில் புரிபவர்களுக்கு புதிய கூட்டாளிகள் வந்திணையலாம்.

READ MORE >>>  மேஷ ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்று

குருவின் பார்வை 10-ம் இடத்தில் பதிவதால் செயல் ஸ்தானம் புனிதமடைகின்றது. தெளிந்த சிந்தனையோடு செயல்படுவீர்கள். வாங்கல்-கொடுக்கல்களில் திருப்தி ஏற்படும். வளமான வாழ்விற்கு வழிவகுத்துக் கொடுக்கும்.

குருவின் பார்வை 12-ம் இடத்தில் பதிவதால் சுபச்செலவு கள் அதிகரிக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை ஏற்படும். வெளிநாட்டில் இருந்தும் கூட ஒருசிலருக்கு அழைப்புகள் வரலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சம்பள உயர்வுடன் கூடிய மாற்றங்கள் வரலாம்.

நட்சத்திர பாதசாரப்படி பலன்கள்

செவ்வாய் சாரத்தில் குரு சஞ்சாரம்(13.11.2021 முதல் 12.12.2021 வரை)

உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், 6-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்குபவர் செவ்வாய். அதன் சாரத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது எதிரிகளை வெல்லும் ஆற்றல் கிடைக்கும்.

உறவினர் பகை மாறும். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுபவர்களை இனம் கண்டு கொள்வீர்கள். உடல்நலம் சீராகும்.

ராகு சாரத்தில் குரு சஞ்சாரம்(13.12.2021 முதல் 1.3.2022 வரை)

உங்கள் ராசிக்கு சப்தம ஸ்தானத்தில் ராகு இருக்கின்றார். அவர் இருப்பது சுக்ரனுடைய வீடாகும். ராகு சுயபலமற்ற கிரகம் என்பதால் அந்த ஸ்தானத்திற்குரிய பலன்களையே வழங்குவார்.

அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது, இக்காலத்தில் பணவரவு திருப்திகரமாக இருக்கும். பெண்களால் பெருமை சேரும். இல்லத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படும்.

சுய சாரத்தில் குரு சஞ்சாரம்(2.3.2022 முதல் 13.4.2022 வரை)

இக்காலத்தில் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு வந்து சேரும். உங்கள் ராசிக்கு தன பஞ்சமாதிபதியாக விளங்குபவர் குரு பகவான்.

எனவே குரு தனது சுய சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது தனவரவு தாராளமாக வந்து சேரும். நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். நீடித்த நோய் அகலும்.

READ MORE >>>  இன்றைய ராசி பலன் - 26.09.2021
ராகு-கேது பெயர்ச்சிக் காலம்

குருப்பெயர்ச்சிக் காலத்தில் 21.3.2022 ல் ராகு-கேது பெயர்ச்சி நிகழவிருக்கின்றது. இதுவரை உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் இருந்த ராகு இப்பொழுது 6-ம் இடத்திற்கு வரப்போகின்றார்.

ஜென்மத்தில் சஞ்சரித்து வந்த கேது இப்பொழுது 12-ம் இடத்திற்குச் செல்லவிருக்கின்றார். 6-ல் ராகு இருந்து குரு கேந்திரத்தில் இருந்தால் அஷ்டலட்சுமி யோகம் என்பார்கள்.

அந்த அடிப்படையில் இப்பொழுது உங்களுக்கு கிரக அமைப்புகள் இருப்பதால் பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். புதிய திருப்பங்களும் உருவாகும். 12-ல் இருக்கும் கேதுவால் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

சிறப்பு வழிபாடு

இல்லத்து பூஜை அறையில் கற்பக விநாயகர் படம் வைத்து, கவசம் பாடி வழிபடுவதோடு, சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உள்ள கற்பக விநாயகரையும், அங்குள்ள குரு பகவானையும் யோகபலம் பெற்ற நாளில் வழிபட்டு வந்தால் வெற்றி வாய்ப்புகள் வீடு வந்து சேரும்.

செவ்வாய் – சனி பார்வை மற்றும் சேர்க்கை
13.11.2021 முதல் 6.12.2021 வரை செவ்வாய்-சனி பார்வைக் காலம்:
26.2.2022 முதல் 6.4.2022 வரை மகரத்தில் செவ்வாய்- சனி சேர்க்கைக் காலம்:

இக்காலம் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டிய காலம். ராசிநாதனாக செவ்வாய் விளங்குவதாலும், சகாய ஸ்தானம் மற்றும் சுக ஸ்தானத்திற்கு அதிபதியாக சனி விளங்குவதாலும், ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நேரமிது.

தைரியமும், தன்னம்பிக்கையும் தேவை. உடன்பிறப்புகளையும், உடன் இருப்பவர்களையும் அனுசரித்துச் செல்வது நல்லது. பொது நலத்தில் உள்ளவர்கள் விழிப்புணர்ச்சியோடு செயல்பட வேண்டும். செவ்வாய் சனிக்குரிய வழிபாடுகளை முறையாக மேற்கொண்டால் நல்ல வாழ்வு அமையும்.

READ MORE >>>  இன்றைய ராசிபலன் -14/11/2021, துலாம் ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்

பெண்களுக்கான பலன்கள்

விருச்சிக ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்த குருப்பெயர்ச்சியின் விளைவாக சுபவிரயங்கள் அதிகரிக்கும். உடல்நலத்தில் கவனம் தேவை. பொருளாதாரம் தேவைக்கேற்ப வந்து சேரும்.

கணவன்-மனைவிக்குள் பாசமும், நேசமும் அதிகரிக்கும். பணிபுரியும் பெண்களுக்கு வேலைப்பளு கூடினாலும், அதற்குரிய விதத்தில் ஊதியமும் கிடைக்கும். குலதெய்வ வழிபாடு முன்னேற்றம் தரும்.

பன்னிரண்டு ராசிகளுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்- 13-11-2021 முதல் 12-11-2022 வரை

குருப்பெயர்ச்சி பலன்கள் – மேஷ ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- ரிஷப ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- மிதுன ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- கடக ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- சிம்ம ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- கன்னி ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- துலாம் ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- விருச்சிக ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- தனுசு ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- மகர ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- கும்ப ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- மீன ராசி

புத்தாண்டு பலன்கள் – விருச்சிக ராசி

ஏனைய தளங்களிற்கு செல்ல..

Previous articleகுருப்பெயர்ச்சி பலன்கள்- துலாம் ராசி
Next articleஅரச ஊழியர்கள் நாட்டுக்கு பெரும் சுமை; நிதியமைச்சர்.