Home Astology குருப்பெயர்ச்சி பலன்கள்- துலாம் ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- துலாம் ராசி

மற்றவர்களின் மனதைப் புரிந்து கொண்டு செயல்படும் துலாம் ராசி நேயர்களே! ஐந்தினில் வந்தது குரு பகவான்; ஆயினும் கவனம் மிகத்தேவை! பன்னிரண்டு ராசிகளுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்- துலாம் ராசி 13-11-2021 முதல் 12-11-2022 வரை

குருப்பெயர்ச்சி பலன்கள்- துலாம் ராசி

இதுவரை உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த குரு பகவான் 13.11.2021 முதல் 5-ம் இடத்திற்கு செல்கின்றார். அதே நேரத்தில் அவரது பார்வை உங்கள் ராசியிலும் பதிகின்றது.

உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு குரு பகவான் பகை கிரகம் என்பதால் அதன் பார்வை பலன் கிடைத்தாலும் கூட எதிர்பார்த்த அளவிற்கு நன்மைகளை வழங்காது. மேலும் அா்த்தாஷ்டமச் சனியின் ஆதிக்கமும் உங்களுக்கு இருக்கின்றது.

எனவே விரயங்கள் மிகமிக அதிகரிக்கும். வீடு, இடம், உத்தியோகம் போன்றவற்றில் எதிர்பாராத மாற்றம் ஏற்படலாம்.

குருவை வழிபடுவதோடு சுய ஜாதக அடிப்படையில் திசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடுகளையும் மேற்கொள்வது நல்லது.

குருவின் பார்வை பலன்

இந்த குருப்பெயர்ச்சியின் விளைவாக குரு பகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதோடு 9, 11 ஆகிய இடங்களையும் பார்க்கின்றார்.

என்னதான் பகை கிரகமாக விளங்கினாலும் குருவிற்கு ஓரளவேனும் பலன் கிடைக்க வேண்டுமல்லவா? எனவே, அா்த்தாஷ்டமச் சனியின் ஆதிக்கத்தால் ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கத்தான் செய்யும்.

அதே நேரம் குரு பார்வை இருப்பதால் மருத்துவ ஆலோசனைகள் மூலம் குணப்படுத்திக் கொள்ள முடியும். பணிபுரியும் இடத்தில் உங்களுக்கு கொடுத்த பொறுப்புகளை நீங்களே கவனித்துப் பார்ப்பது நல்லது. பிறரிடம் ஒப்படைத்தால் அது செவ்வனே நடைபெறாமல் பிரச்சினையை உருவாக்கும்.

READ MORE >>>  சந்திராஷ்டமம் இருப்பதால் கவனம் தேவை

குருவின் பார்வை 9-ம் இடத்தில் பதிவதால் பாக்கிய ஸ்தானம் புனிதமடைகின்றது. இதன் விளைவாக சொத்துக்களை பங்கிட்டுக் கொள்வதில் தகராறுகள் ஏற்பட்டு, அதன்பிறகே நல்ல முடிவிற்கு வரும்.

குருவின் பார்வை 11-ம் இடத்தில் பதிவதால் பயணங்கள் அதிகரிக்கும். தூர தேசத்தில் இருந்தோ, வெளிமாநிலங்களில் இருந்தோ பணிபுரிய அழைப்புகள் வரலாம். அதை யோசித்துப் பார்த்து ஏற்றுக்கொள்வதே நல்லது.

நட்சத்திர பாதசாரப்படி பலன்கள்

செவ்வாய் சாரத்தில் குரு சஞ்சாரம்(13.11.2021 முதல் 12.12.2021 வரை)

உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். எனவே குடும்பத்தில் சுபவிரயங்கள் அதிகரிக்கும். வீடு, நிலம் வாங்குவது பற்றிச் சிந்திப்பீர்கள். கட்டிய வீட்டைப் பழுது பார்க்கும் யோகமும் ஒருசிலருக்கு வாய்க்கும். வருமானம் திருப்தி தரும்.

ராகு சாரத்தில் குரு சஞ்சாரம்(13.12.2021 முதல் 1.3.2022 வரை)

உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் ராகு இருக்கிறார். ‘மறைந்த ராகுவால் நிறைந்த தனலாபம் கிடைக்கும்’ என்பது பழமொழி. எனவே எதிர்பார்த்தபடியே தொழிலில் லாபம் உண்டு.

பிரிந்து சென்ற உறவினர்கள் விரும்பி வந்து இணைவர். பெண் பிள்ளைகளின் சுபச்சடங்குகள் இக்காலத்தில் நடைபெறலாம். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு.

சுய சாரத்தில் குரு சஞ்சாரம்(2.3.2022 முதல் 13.4.2022 வரை)

குரு பகவான் உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர். எனவே இக்காலத்தில் கொஞ்சம் கவனமுடன் இருக்க வேண்டும். கடன் சுமை கொஞ்சம் கூடலாம். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்கும் சூழ்நிலையும் ஒருசிலருக்கு ஏற்படும்.

ராகு-கேது பெயர்ச்சிக் காலம்

குருப்பெயர்ச்சி காலத்தில் 21.3.2022 ல் ராகு-கேது பெயர்ச்சி நிகழவிருக்கின்றது. இதுவரை உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த ராகு இனி 7-ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகின்றார்.

READ MORE >>>  இன்றைய ராசிபலன் - 04.08.2021

களத்திர ஸ்தானத்தில் ராகு சஞ்சரிக்கப்போவதால் வாழ்க்கைத் துணை வழியே அடிக்கடி பிரச்சினைகள் ஏற்படும். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நேரமிது.

இதுவரை உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் சஞ்சரித்தகேது, இப்பொழுது ஜென்ம ராசிக்கு வருகின்றார். எனவே ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். நீண்ட தூரப் பயணங்கள் செல்லப் போட்ட திட்டங்கள் நிறைவேறலாம். அடகு வைத்த நகைகளை மீட்பீர்கள்.

சிறப்பு வழிபாடு

இல்லத்து பூஜை அறையில் குரு பகவான் படம் வைத்து முல்லைப்பூ மாலை சூட்டிக் குரு கவசம் படிப்பதோடு, யோக பலம் பெற்ற நாளில் இரணியூர் ஆட்கொண்ட நாதரையும், சிவபுரம் தேவி மற்றும் ஆலயத்திலுள்ள தட்சிணா மூர்த்தியையும் வாய்ப்பிருக்கும் பொழுது சென்று வழிபட்டு வருவது நல்லது.

செவ்வாய் – சனி பார்வை மற்றும் சேர்க்கை
13.11.2021 முதல் 6.12.2021 வரை செவ்வாய்-சனி பார்வைக் காலம்:
26.2.2022 முதல் 6.4.2022 வரை மகரத்தில் செவ்வாய்- சனி சேர்க்கைக் காலம்:

இக்காலம் மிகமிகக் கடுமையான காலமாகும். எதிலும் கவனம் செலுத்த இயலாது. சுகக்கேடுகளும், விரயங்களும் அதிகரிக்கும். துணிவும், தன்னம்பிக்கையும் குறையும்.

எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. திடீர் தாக்கங்களும், வீண் பழிகளும் ஏற்படும். கடமையில் தொய்வு ஏற்படும். குடும்ப ஒற்றுமை குறையும்.

கூட்டாளிகள் உங்களை விட்டு விலக நேரிடும். இக்காலத்தில் செவ்வாய் சனிக்குரிய பரிகாரங்களை செய்வதன் மூலமே நன்மைகளைப் பெற முடியும்.

பெண்களுக்கான பலன்கள்

துலாம் ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்தக் குருப்பெயர்ச்சி ஓரளவே நன்மை செய்யக் கூடியதாக இருக்கின்றது. அா்த்தாஷ்டமச் சனியின் ஆதிக்கமும் இருப்பதால் கணவன்-மனைவிக்குள் அனுசரித்துச் செல்வதன் மூலமே அமைதி காணலாம்.

READ MORE >>>  இன்றைய ராசி பலன் - 27.11.2021

பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்வது நல்லது. பணிபுரியும் பெண்கள் பணிபுரியும் இடத்தில் பிரச்சினைகள் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். சனி பகவான் மற்றும் குரு பகவான் வழிபாடு சந்தோஷத்தை தரும்.

பன்னிரண்டு ராசிகளுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்- 13-11-2021 முதல் 12-11-2022 வரை

குருப்பெயர்ச்சி பலன்கள் – மேஷ ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- ரிஷப ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- மிதுன ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- கடக ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- சிம்ம ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- கன்னி ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- துலாம் ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- விருச்சிக ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- தனுசு ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- மகர ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- கும்ப ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- மீன ராசி

 

ஏனைய தளங்களிற்கு செல்ல..

Previous articleகுருப்பெயர்ச்சி பலன்கள்- கன்னி ராசி
Next articleகுருப்பெயர்ச்சி பலன்கள்- விருச்சிக ராசி