Home Astology குருப்பெயர்ச்சி பலன்கள்- கன்னி ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- கன்னி ராசி

எதிர்காலத்தைப் பற்றியே எப்போதும் சிந்திக்கும் கன்னி ராசி நேயர்களே! ஆறில் வந்தது குரு பகவான்; அமைதியும் நிதானமும் இனித்தேவை! பன்னிரண்டு ராசிகளுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்- கன்னி ராசி 13-11-2021 முதல் 12-11-2022 வரை

குருப்பெயர்ச்சி பலன்கள்- கன்னி ராசி

இதுவரை உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் சஞ்சரித்து வந்த குரு பகவான், 13.11.2021 முதல் 6-ம் இடத்திற்கு செல்கின்றார். ‘ஆறில் குரு வந்தால் ஊரில் பகை’ என்பது பழமொழி.

ஆனால் உங்கள் ராசியை பொறுத்தவரை குரு பகவான் 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதி என்பதால், ‘கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் ஆறில் வரும் பொழுது யோகம் செய்யும்’ என்பார்கள்.

எனவே அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது குருவால் உங்களுக்கு நன்மை கிடைக்கும். அதன் பார்வை பலத்தால் தொழில் வளம் சிறப்பாக இருக்கும்.

எதிர்ப்பு, வியாதி, கடன் ஆகியவற்றைக் குறிக்குமிடமாக 6-ம் இடம் கருதப்படுவதால் மறைமுக எதிர்ப்புகள் இருக்கத்தான் செய்யும். ஆனால் பாதிக்காது. எனவே குருவிற்குரிய சிறப்பு வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது.

குருவின் பார்வை பலன்

இந்த குரு பெயர்ச்சியின் விளைவாக குரு பகவான் உங்கள் ராசிக்கு 2, 10, 12 ஆகிய இடங்களைப் பார்க்கின்றார். எனவே அந்த மூன்று இடங்களும் புனிதமடைந்து நன்மைகளைக் கொடுக்கலாம். குருவின் பார்வை 2-ம் இடத்தில் பதிவதால் குடும்ப முன்னேற்றம் திருப்திகரமாக இருக்கும்.

குருவின் பார்வை 10-ம் இடத்தில் பதிவதால் முத்தான தொழில் அமையும். முன்னேற்றப் பாதையில் செல்ல வழிவகுத்துக் கொடுக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் கூடுதல் சம்பளம் தருகிற வேலைக்கு முயற்சி செய்தால் அது கிடைக்கும்.

READ MORE >>>  இன்றைய ராசிபலன் - 10/11/2021, மேஷ ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்

குருவின் பார்வை 12-ம் இடத்தில் பதிவதால் சுபச்செலவுகள் அதிகரிக்கும். வீடு கட்டுவது அல்லது வீடு வாங்குவது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள்.

பணிபுரியும் இடத்தில் மேலதிகாரிகளுக்கு உங்கள் பணியில் திருப்தி இல்லாமல் போகலாம். இதனால், வேறு இடத்திற்கு மாறிக்கொள்ளலாமா, அல்லது சுயதொழில் தொடங்கலாமா என்று சிந்திப்பீர்கள்.

நட்சத்திர பாதசாரப்படி பலன்கள்

செவ்வாய் சாரத்தில் குரு சஞ்சாரம் (13.11.2021 முதல் 12.12.2021 வரை)

உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். எனவே நிதானத்தோடு செயல்பட வேண்டிய நேரமாகும். நிகழ்காலத் தேவைகள் கடைசி நேரத்தில் தான் பூர்த்தியாகும்.

தொழில் பங்குதாரர்கள் நம்பிக்கைக்கு பாத்திரமாக நடந்து கொள்ள மாட்டார்கள். எனவே கொஞ்சம் விழிப்புணர்ச்சியோடு இருப்பது நல்லது. உடல் நலனில் கொஞ்சம் கவனம் தேவை.

ராகு சாரத்தில் குரு சஞ்சாரம் (13.12.2021 முதல் 1.3.2022)

உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் ராகு இருக்கின்றார். அது சுக்ரனின் வீடாகும். ராகு சுயபலமற்ற கிரகம் என்பதால் அந்த ஸ்தானாதிபதிக்குரிய பலன்களையே வழங்கும்.

அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது பூர்வீக சொத்துக்களில் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். குடும்பத்தில் குதூகலம் தரும் சம்பவங்கள் நடை பெறும். உடன்பிறப்புகளை அனுசரித்துக் கொள்வது நல்லது.

சுய சாரத்தில் குரு சஞ்சாரம் (2.3.2022 முதல் 13.4.2022 வரை)

இக்காலத்தில் நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். குரு பகவான் உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியாவார். எனவே இடம் வாங்குதல், வீடு கட்டுதல் போன்ற வாய்ப்புகள் கைகூடிவரும்.

READ MORE >>>  சந்திராஷ்டமம் இருப்பதால் கவனம் தேவை

தாய்வழி ஆதரவு கிடைக்கும். கல்யாணம் போன்ற சுபகாரியங்கள் நடை பெறுவதற்கான அறிகுறிகள் தென்படும். ெவளிநாட்டு முயற்சியில் எதிர்பார்த்த நற்பலன் கிடைக்கும்.

ராகு-கேது பெயர்ச்சிக் காலம்

குருப்பெயர்ச்சிக் காலத்தில் 21.3.2022-ல் ராகு -கேது பெயர்ச்சி நிகழவிருக்கின்றது. இதுவரை உங்கள் ராசிக்கு 9-ம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் ராகு பகவான் சஞ்சரித்து வந்தார். சகாய ஸ்தானத்தில் கேது பகவான் சஞ்சரித்தார்.

இப்பொழுது இரண்டாமிடத்தில் கேதுவும், எட்டாமிடத்தில் ராகுவும் வருகிறார்கள். இந்த மாற்றம் நல்ல மாற்றம் தான். மறைந்த ராகுவால் நிறைந்த தனலாபம் கிடைக்கும்.

என்றைக்கோ வாங்கிப் போட்ட இடம் இப் பொழுது விலை உயர்ந்து உங்களை செல்வந்தராக்கலாம். தன ஸ்தானத்தில் கேது இருப்பதால் குடும்பத்தில் சுபநிகழ்வுகள் நடைபெறும். ஆரோக்கியத்தில் மட்டும் கூடுதல் கவனம் தேவை.

சிறப்பு வழிபாடு

இல்லத்து பூஜை அறையில் விஷ்ணு-லட்சுமி, படம்வைத்து லட்சுமி கவசம் பாடி வழிபடுவது நல்லது, வாய்ப்பிருக்கும் பொழுது சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலத்திலுள்ள திசைமாறிய தென்முகக் கடவுளை வழிபட்டு வருவதன் மூலம் நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும்.

செவ்வாய் – சனி பார்வை மற்றும் சேர்க்கை
13.11.2021 முதல் 6.12.2021 வரை செவ்வாய்-சனி பார்வைக் காலம்:
26.2.2022 முதல் 6.4.2022 வரை மகரத்தில் செவ்வாய்- சனி சேர்க்கைக் காலம்:

இக்காலத்தில் கூடுதல் கவனத்தோடு செயல்படுவது நல்லது. தன ஸ்தானத்தில் உள்ள செவ்வாய், பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உள்ள சனியைப் பார்க்கின்றது. சனியும் செவ்வாயும் பார்ப்பதால் குடும்பத்தில் பழைய பிரச்சினைகள் மீ்ண்டும் தலைதூக்கலாம்.

READ MORE >>>  இன்றைய ராசிபலன் - 05.08.2021

சொத்துக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினையில் முடிவு கிடைக்க தாமதப்படும். தனவிரயம் உண்டு. உத்தியோகத்தில் மற்றவர்களை நம்பி எந்தப் பொறுப்பையும் ஒப்படைக்க இயலாது. குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வதன் மூலமே அமைதி காண இயலும்.

பெண்களுக்கான பலன்கள்

கன்னி ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்தக் குருப்பெயர்ச்சியின் விளைவாக தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். கணவன்-மனைவிக்குள் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது.

பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதிப் புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். பணிபுரியும் பெண்களுக்கு சம்பள உயர்வுடன் கூடிய புதிய வேலை கிடைக்கலாம். சக்கரத்தாழ்வார் வழிபாடு சந்தோஷம் வழங்கும்.

பன்னிரண்டு ராசிகளுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்- 13-11-2021 முதல் 12-11-2022 வரை

குருப்பெயர்ச்சி பலன்கள் – மேஷ ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- ரிஷப ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- மிதுன ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- கடக ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- சிம்ம ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- கன்னி ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- துலாம் ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- விருச்சிக ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- தனுசு ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- மகர ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- கும்ப ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- மீன ராசி

 

ஏனைய தளங்களிற்கு செல்ல..

Previous articleகுருப்பெயர்ச்சி பலன்கள்- சிம்ம ராசி
Next articleகுருப்பெயர்ச்சி பலன்கள்- துலாம் ராசி