Home Astology குருப்பெயர்ச்சி பலன்கள்- சிம்ம ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- சிம்ம ராசி

கேட்ட உதவிகளைக் கேட்ட உடன் செய்து கொடுக்கும் சிம்ம ராசி நேயர்களே! ஏழில் வந்தது குரு பகவான்; இனி எல்லா நாட்களும் நலமாகும்! பன்னிரண்டு ராசிகளுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்- சிம்ம ராசி 13-11-2021 முதல் 12-11-2022 வரை

குருப்பெயர்ச்சி பலன்கள்- சிம்ம ராசி

இதுவரை உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த குரு பகவான், 7-ம் இடத்தில் அடியெடுத்து வைக்கின்றார். 7-ம் இடம் என்பது களத்திர ஸ்தானமாகும். அங்கு அமர்ந்திருக்கும் குருவின் பார்வை உங்கள் ராசியில் முழுமையாகப் பதிகின்றது.

‘குரு பார்க்க கோடி நன்மை’ என்பதற்கேற்ப இதுவரை ஏற்பட்ட இழப்புகளை எல்லாம் ஈடுசெய்து கொடுக்கப் போகின்றார். பொருளாதாரத்தில் நிறைவு, புகழ், கீர்த்தி, செல்வாக்கு, அருளாளர்களின் ஆதரவு, அரசியல்வாதிகளின் நட்பு, சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும் சூழ்நிலை போன்ற நல்ல வாய்ப்புகள் வரப்போவதை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

கடன் சுமை முழுமையாக குறைந்து கவலைகள் தீரும். பூமி விற்பனையால் லாபம் கிடைக்கும். மேலும் அபரிமிதமான வளர்ச்சி காண சுய ஜாதகத்தில் திசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடுகளை மேற்கொள்ளுங்கள். குருவிற்குரிய சிறப்பு ஸ்தலங்களுக்குச் சென்று வழிபட்டு வருவது நல்லது.

குருவின் பார்வை பலன்

இந்தக் குருப்பெயர்ச்சியின் விளைவாக குரு பகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதோடு, 3, 11 ஆகிய இடங்களையும் முறையாகப் பார்க்கின்றார். எனவே ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். உற்சாகத்துடன் பணிபுரிந்து உன்னத வாழ்க்கையை அமைத்துக் கொள்வீர்கள்.

குருவின் பார்வை 3-ம் இடத்தில் பதிவதால் முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்க வாய்ப்புகள் கை கூடிவரும். வெற்றிகள் ஸ்தானம் புனிதமடைவதால் வெற்றிக் கனியை விரைவில் எட்டிப் பிடிப்பீர்கள். தொழில் சூடு பிடிக்கும்.

READ MORE >>>  இன்றைய ராசி பலன் - 11.11.2021

கூட்டுத்தொழில் தனித்தொழிலாக மாறவும் வாய்ப்புகள் கைகூடி வரும். அரைகுறையாக நின்ற வேலைகள் இப்பொழுது துரிதமாக நடைபெறும்.

குருவின் பார்வை 11-ம் இடத்தில் பதிவதால் லாப ஸ்தானம் புனிதமடைகின்றது. எனவே தொழிலில் எதிர்பாராத விதத்தில் பலமடங்கு லாபம் கிடைக்கும். போட்டிக்கடை வைத்தோர் விலகுவர்.

புதிய கூட்டாளிகள் வந்திணைந்து வளர்ச்சிக்கு வழிகாட்டுவர். உயர்பதவி வகிப்பவர்களுக்கு வெளிநாட்டில் இருக்கும் நல்ல நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம். வாடகைக் கட்டிடத்தில் நடைபெறும் தொழிலை சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் அமைப்பு உண்டு.

நட்சத்திர பாதசாரப்படி பலன்கள்

செவ்வாய் சாரத்தில் குரு சஞ்சாரம் (13.11.2021 முதல் 12.12.2021 வரை)

உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். யோக காரகனான செவ்வாய் சாரத்தில் குரு சஞ்சரிப்பது அற்புதமான நேரமாகும். தொட்டது துலங்கும், நினைத்தது நடக்கும்.

தொழில் வளம் சிறக்கும். தொல்லைகள் அகலும். கடன் சுமை குறையும். கவலைகள் தீரும். தெளிந்த மனநிலையோடு செயல்படுவீர்கள்.

ராகு சாரத்தில் குரு சஞ்சாரம் (13.12.2021 முதல் 1.3.2022 வரை)

உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் இப்பொழுது ராகு சஞ்சரிக்கின்றார். அவர் சஞ்சரிக்கும் வீட்டிற்கு அதிபதி சுக்ரன் ஆவார்.

குறிப்பாக தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். துணையாக இருப்பவர்கள் தோள் கொடுத்து உதவுவர். புதிய தொழில் தொடங்கும் திட்டங்கள் நிறைவேறும். பழைய கடன் பாக்கிகள் இப்பொழுது வசூலாகும்.

சுய சாரத்தில் குரு சஞ்சாரம் (2.3.2022 முதல் 13.4.2022 வரை)

உங்கள் ராசிக்கு பஞ்சம அஷ்டமாதிபதியானவர் குரு. பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு அதிபதியாகவும், இழப்புகள் ஸ்தானத்திற்கு அதிபதியாகவும் குரு விளங்குவதால் வரவைக் காட்டிலும் செலவு கூடும்.

READ MORE >>>  இன்றைய ராசிபலன் - 02/11/2021, மேஷ ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்

திட்டமிட்ட காரியங்கள் சில நடைபெறாமலும் போகலாம். எதிரிகளை அரவணைத்துக் கொள்வது நல்லது. இதுபோன்ற நேரங்களில் சிறப்பு வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது.

ராகு-கேது பெயர்ச்சிக் காலம்

குருப்பெயர்ச்சிக் காலத்தில் 21.3.2022 ல் ராகு-கேது பெயர்ச்சி நிகழவிருக்கின்றது. இதுவரை உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த ராகு பகவான் 9-ம் இடம் எனப்படும் பாக்கிய ஸ்தானத்திற்கு செல்கின்றார்.

இதுவரை சுக ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த கேது பகவான் இனிமேல் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போகின்றார். எனவே தந்தை வழி உறவில் இருந்த விரிசல்கள் அகலும். பிள்ளைகளின் பட் டப்படிப்பு சம்பந்தமாக நீங்கள் செய்யும் முயற்சி கைகூடும்.

சிறப்பு வழிபாடு

இல்லத்து பூஜை அறையில் குரு தட்சிணாமூர்த்தி படம் வைத்து குரு கவசம் பாடி வழிபடுவதோடு, வாய்ப்பிருக்கும் பொழுது தஞ்சை மாவட்டத்திலுள்ள தஞ்சபுரீஸ்வரர் கோவிலுக்கு சென்று வழிபட்டு வருவது நல்லது.

செவ்வாய் – சனி பார்வை மற்றும் சேர்க்கை
13.11.2021 முதல் 6.12.2021 வரை செவ்வாய்-சனி பார்வைக் காலம்:
26.2.2022 முதல் 6.4.2022 வரை மகரத்தில் செவ்வாய்-சனி சேர்க்கைக் காலம்:

இக்காலத்தில் கூடுதல் கவனத்தோடு செயல்பட வேண்டும். ஆரோக்கியத் தொல்லைகளும், மருத்துவச் செலவுகளும் உண்டு. பணிபுரியும் இடத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும். இக்காலத்தில் யாரையும் நம்பிச் செயல்பட முடியாது.

`நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்ய முடியவில்லையே’ என்று கவலைப்படுவீர்கள். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு வீண் பழி வந்து சேரும்.

ஒரு பக்கம் வருமானம் வந்தாலும் மற்றொரு பக்கம் இரு மடங்கு செலவாகும். குடும்ப ஒற்றுமை குறையலாம். எனவே இக்காலத்தில் எதையும் சிந்தித்துச் செய்வது நல்லது.

READ MORE >>>  9ன் சிறப்பு தெரியுமா? வாங்க

பெண்களுக்கான பலன்கள்

சிம்ம ராசியில் பிறந்த பெண்களுக்கு குருவின் பார்வை இருப்பதால் முன்னேற்றத்தில் ஏற்பட்ட முட்டுக்கட்டைகள் அகலும். உடல்நலம் சீராகும். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். இல்லறம் இனிக்கும். கல்யாண முயற்சிகள் கைகூடும்.

பணிபுரியும் பெண்களுக்கு கேட்ட சலுகைகளும் கிடைக்கும். பதவி உயர்வும் வந்து சேரும். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். குரு பகவான் வழிபாடு குடும்ப முன்னேற்றத்திற்கு வித்திடும்.

பன்னிரண்டு ராசிகளுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்- 13-11-2021 முதல் 12-11-2022 வரை

குருப்பெயர்ச்சி பலன்கள் – மேஷ ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- ரிஷப ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- மிதுன ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- கடக ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- சிம்ம ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- கன்னி ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- துலாம் ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- விருச்சிக ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- தனுசு ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- மகர ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- கும்ப ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- மீன ராசி

புத்தாண்டு பலன்கள் – சிம்ம ராசி

ஏனைய தளங்களிற்கு செல்ல..

Previous articleகுருப்பெயர்ச்சி பலன்கள்- கடக ராசி
Next articleகுருப்பெயர்ச்சி பலன்கள்- கன்னி ராசி