Home Astology குருப்பெயர்ச்சி பலன்கள்- கடக ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- கடக ராசி

எந்த நேரமானாலும் கேட்டவர்க்கு கேட்ட உதவிகளைச் செய்து கொடுக்கும் கடக ராசி நேயர்களே! எட்டில் வந்தது குரு பகவான்; எதிலும் கவனம் இனித்தேவை! பன்னிரண்டு ராசிகளுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்- கடக ராசி 13-11-2021 முதல் 12-11-2022 வரை

குருப்பெயர்ச்சி பலன்கள்- கடக ராசி

இதுவரை உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த குரு பகவான், 13.11.2021 முதல் 8-ம் இடத்திற்குச் செல்கின்றார். அஷ்டமத்து குருவின் ஆதிக்கம் தொடங்கி விட்டது. உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு.

எனவே, 6-க்கு அதிபதி 8-ம் இடத்தில் மறைவது நன்மைதான். ‘கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்’ என்பதற்கு ஏற்ப இடையிடையே நல்ல பலன்களும் நடைபெறும். சங்கிலித் தொடர்போல கடன் சுமை வந்தாலும், அவற்றை அடைக்கக் கூடிய வாய்ப்பும் அடுத்தடுத்து வந்து சேரும்.

இடமாற்றங்கள், வீடு மாற்றங்கள் ஏற்படலாம். பணிபுரியும் இடத்தில் உங்கள் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்காது. சுய ஜாதகத்தில் திசாபுத்தி பலம் பெற்றிருக்குமேயானால் நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். இடர்பாடுகள் ஏற்படுமேயானால் வியாழக்கிழமை தோறும் குரு பகவானை வழிபடுவது நல்லது.

குருவின் பார்வை பலன்

இந்த குருப்பெயர்ச்சியின் விளைவாக குரு பகவான் உங்கள் ராசிக்கு 2, 4, 12 ஆகிய இடங்களைப் பார்க்கின்றார். குருவின் பார்வை 2-ம் இடத்தில் பதிவதால் தன ஸ்தானம் புனிதமடைகின்றது.

அது மட்டுமல்ல, வாக்கு மற்றும் குடும்பம் பற்றிய தகவல் அறியும் இடமாகவும் 2-ம் இடம் அமைவதால் குடும்ப முன்னேற்றம் கூடுதலாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களில் சிலருக்கு வேலை கிடைத்து வருமானம் அதிகரிக்கும்.

READ MORE >>>  குருப்பெயர்ச்சி பலன்கள்- சிம்ம ராசி

பற்றாக்குறை அகலும். அரசு வேலை கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்படும். கல்யாணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெற்று மகிழ்ச்சி தரும். கண்டகச் சனியின் ஆதிக்கம் இருப்பதால் எதையும் ஒருமுறைக்குப் பல முறை யோசித்துச் செய்வதே நல்லது,

குருவின் பார்வை 4-ம் இடத்தில் பதிவதால் தாயின் ஆதரவு கிடைக்கும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் யோகம் உண்டு.

குருவின் பார்வை 12-ம் இடத்தில் பதிவதால் சகோதர வழியில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆன்மிகப் பயணங்கள் அதிகரிக்கும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ெவளிநாட்டில் பணிபுரியும் உறவினர்கள் மூலம் அனுகூலமான தகவல் வந்து சேரும்.

நட்சத்திர பாதசாரப்படி பலன்கள்

செவ்வாய் சாரத்தில் குரு சஞ்சாரம்(13.11.2021 முதல் 12.12.2021 வரை)

உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். மேலும் யோக காரகனாகவும் விளங்குபவர். எனவே அவர் சாரத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரம் யோகமான காலம் தான்.

எனவே வாங்கல்-கொடுக்கல்கள் திருப்தி தரும். வளர்ச்சி அதிகரிக்கும். தேங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும்.

ராகு சாரத்தில் குரு சஞ்சாரம்(13.12.2021 முதல் 1.3.2022 வரை)

உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிக்கின்றார். சுயபலமற்ற கிரகம் ராகு என்பதால் அவர் சஞ்சரிக்கும் வீட்டிற்கு அதிபதியான சுக்ரனின் தன்மையைப் பொறுத்து உங்களுக்கு பலன்களை வழங்குவார்.

எனவே இக்காலத்தில் செலவிற்கேற்ற வரவு வந்து சேரும். செய்தொழிலில் சிறுசிறு மாற்றங்கள் ஏற்படும். கடன் சுமையின் காரணமாக கவலைகள் அதிகரிக்கும்.

சுய சாரத்தில் குரு சஞ்சாரம் (2.3.2022 முதல் 13.4.2022)

உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. அவர் தனது சுய சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது மறைமுக எதிர்ப்புகளும், மாற்றுக் கருத்துடையோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

READ MORE >>>  இன்றைய ராசிபலன் - 09.08.2021

எதையும் துணிந்து செய்ய இயலாது. திட்டமிட்ட காரியங்கள் திசைமாறிச் செல்லும். கடன்சுமை கூடும். நிதானத்தோடும், பொறுமையோடும் செயல்படுவது நல்லது.

ராகு-கேது பெயர்ச்சி காலம்

குருப்பெயா்ச்சிக் காலத்தில் 21.3.2022-ல் ராகு-கேது பெயர்ச்சி நிகழவிருக்கின்றது. இதுவரை உங்கள் ராசிக்கு 11-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த ராகு பகவான் இப்பொழுது 10-ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகின்றார்.

6-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த கேது இனி 5-ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகின்றார். எனவே தொழில் வளம் சிறப்பாக இருக்கும். எதிரிகளின் பலம் குறையும். பிள்ளைகளின் கடமைகளைச் செய்து முடிப்பீர்கள்.

சிறப்பு வழிபாடு

இல்லத்து பூஜை அறையில் குரு தட்சிணாமூர்த்தி படம் வைத்து பஞ்சமுக விளக்கேற்றி குரு கவசம் பாடி வழிபடுவது நல்லது.

மேலும் வடக்கு நோக்கி வீற்றிருந்து அருள் வழங்கும் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரை வாய்ப்பிருக்கும் பொழுதெல்லாம் நேரில் சென்று வழிபட்டு வருவது நல்லது.

செவ்வாய் – சனி பார்வை மற்றும் சேர்க்கை
13.11.2021 முதல் 6.12.2021 வரை செவ்வாய்-சனி பார்வைக் காலம்:
26.2.2022 முதல் 6.4.2022 வரை மகரத்தில் செவ்வாய்- சனி சேர்க்கைக் காலம்:

இக்காலத்தில் மிக மிக கவனத்தோடு செயல்படுவது நல்லது. கண்டகச் சனியின் ஆதிக்கமும் இருப்பதால் விரயங்கள் கடுமையாக இருக்கும். வீண் பிரச்சினைகள் அதிகரிக்கும்.

தொழிலில் பணியாளர்களால் நிம்மதி குறையும். பெரிய முதலீடுகள் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. ஆரோக்கியத்திற்கான செலவுகள் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணை மற்றும் பிள்ளைகளின் குணங்களில் மாறுபாடு ஏற்படும். திடீா் பணிமாற்றங்கள் நிம்மதி இன்மையைக் கொடுக்கும்.

READ MORE >>>  இன்றைய ராசி பலன் - 11.11.2021

பெண்களுக்கான பலன்கள்

கடக ராசியில் பிறந்த பெண்களுக்கு அஷ்டமத்து குருவின் ஆதிக்கத்தால் பிரச்சினைகள் அதிகரிக்கும். வம்பு, வழக்குகள் தேடி வரும். உறவினர் பகை உருவாகும்.

கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்பட, விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்ளுங்கள்

பன்னிரண்டு ராசிகளுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்- 13-11-2021 முதல் 12-11-2022 வரை

குருப்பெயர்ச்சி பலன்கள் – மேஷ ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- ரிஷப ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- மிதுன ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- கடக ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- சிம்ம ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- கன்னி ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- துலாம் ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- விருச்சிக ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- தனுசு ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- மகர ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- கும்ப ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- மீன ராசி

புத்தாண்டு பலன்கள் – கடக ராசி

ஏனைய தளங்களிற்கு செல்ல..

Previous articleகுருப்பெயர்ச்சி பலன்கள்- மிதுன ராசி
Next articleகுருப்பெயர்ச்சி பலன்கள்- சிம்ம ராசி