Home Astology குருப்பெயர்ச்சி பலன்கள்- மிதுன ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- மிதுன ராசி

திட்டங்களைத் திடீர் திடீரென்று மாற்றிக் கொள்ளும் மிதுன ராசி நேயர்களே! ஒன்பதில் வந்தது குரு பகவான்; பொன் பொருள் சேரும் இனிநாளும்! பன்னிரண்டு ராசிகளுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்- மிதுன ராசி 13-11-2021 முதல் 12-11-2022 வரை

குருப்பெயர்ச்சி பலன்கள்- மிதுன ராசி

இதுவரை உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த குரு பகவான், இப்பொழுது 9-ம் இடமான பாக்கிய ஸ்தானத்திற்கு வருகின்றார். சப்தம ஸ்தானம் மற்றும் தொழில் ஸ்தானத்திற்கு அதிபதியான குரு, பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பது யோகம் தான்.

மேலும் அதன் பஞ்சம பார்வை உங்கள் ராசியில் பதிவதால் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும். இதுவரை இருந்த தடைகள் அனைத்தும் தானாக விலகும். உங்கள் லட்சியக் கனவுகள் அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவேறப் போகின்றது. பணவரவு அதிகரிக்கும். இனிய விதத்தில் எதிர்பார்த்த பலன்கள் நடைபெறும்.

குருவின் பார்வை பலன்

இந்தக் குருப்பெயர்ச்சியின் விளைவாக குரு பகவான் உங்கள் ராசிக்கு 1, 3, 5 ஆகிய இடங்களைப் பார்க்கின்றார். எனவே இ்ந்த மூன்று இடங்களும் புனிதமடைகின்றன. ஜென்மத்தைக் குரு பார்ப்பதால் நன்மைகள் அதிகம் கிடைக்கும்.

பார்த்த இடம் செழிக்கும். பட்ட இடம் துளிர்க்கும். பரபரப்பாகச் செயல்பட்டு பாராட்டும், புகழும் பெறப்போகிறீர்கள். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். அதிவேகமாக முன்னேற்றம் காணப் புதுவழிபிறக்கும்.

வெற்றிகள் ஸ்தானம் பலம் பெறுவதால் இந்த நேரத்தில் மனத்தடுமாற்றங்கள் அகலும். மக்கள் செல்வாக்கு மேலோங்கும்.

குருவின் பார்வை 5-ம் இடத்தில் பதிவதால் பூர்வ, புண்ணிய ஸ்தானம் புனிதமடைகின்றது. எனவே உங்களுக்கு பூர்வ புண்ணியத்தின் பயனாக என்னென்னவெல்லாம் கிடைக்க வேண்டுமோ அவை அனைத்தும் இப்பொழுது கிடைக்கப் போகின்றது.

READ MORE >>>  இன்றைய ராசி பலன் - 07.10.2021

குறிப்பாக பிள்ளைப் பேறுக்காகத் தவமிருக்கும் தம்பதிகளுக்கு இப்பொழுது குழந்தை பாக்கியம் கிடைக்கும். இல்லத்தில் மங்கல ஓசை கேட்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் குருப்பெயர்ச்சி இது.

நட்சத்திர பாதசாரப்படி பலன்கள்

செவ்வாய் சாரத்தில் குரு சஞ்சாரம்(13.11.2021 முதல் 12.12.2021 வரை)

உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் ஜீவன ஸ்தானம் மற்றும் லாப ஸ்தானத்திற்கு அதிபதியானவர். எனவே வாங்கல்-கொடுக்கல்கள் ஒழுங்காகும்.

வளர்ச்சி கூடும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். பொருளாதாரப் பற்றாக்குறை இருந்தாலும் அதை சமாளிக்கும்ஆற்றல் உங்களுக்கு உண்டு. வெளிநாடு செல்லும் முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு இப்பொழுது நல்ல தகவல் வரப்போகின்றது.

ராகு சாரத்தில் குரு சஞ்சாரம்(13.12.2021 முதல் 1.3.2022 வரை)

உங்கள் ராசிக்கு 12-ம் இடமான விரய ஸ்தானத்தில் ராகு பகவான் சஞ்சரிக்கின்றார். சுயபலமற்ற கிரகம் ராகு என்பதால் அது இருக்கும் இடத்தின் அதிபதியைப் பொறுத்தே பலன்களைக் கொடுக்கும்.

தொழில் வளம் சீராக இருக்கும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். எதிர்காலம் பற்றிய பயம் அகலும். பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சினை தீரும். அவர்கள் எதிர்கால நலன்கருதி நீங்கள் தீட்டிய திட்டங்களும் வெற்றிபெறும்.

சுய சாரத்தில் குரு சஞ்சாரம்(2.3.2022 முதல் 13.4.2021 வரை)

உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. அவர் களத்திர ஸ்தானம் மற்றும் தொழில் ஸ்தானத்திற்கு அதிபதியாக விளங்குவதால் இக்காலம் ஒரு பொற்காலமாகவே அமையும்.

கல்யாண முயற்சிகள் கைகூடும். கடமையில் இருந்த தொய்வு அகலும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். தொழில் சூடுபிடிக்கும். கணவன்-மனைவி ஒற்றுமை பலப்படும்.

READ MORE >>>  இன்றைய ராசி பலன் - 01.12.2021
ராகு-கேது பெயர்ச்சி காலம்

குருப்பெயர்ச்சிக் காலத்தில் 21.3.2022 ல் ராகு-கேது பெயர்ச்சி நிகழவிருக்கின்றது. இதுவரை உங்கள் ராசிக்கு விரய ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த ராகு பகவான் இப்பொழுது லாப ஸ்தானத்திற்கு வருகின்றார்.

அதே நேரத்தில் 6-ல் உள்ள கேது பஞ்சம ஸ்தானத்திற்கு வருகின்றார். எனவே லாப ஸ்தானம் வலுவடைகின்றது. பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். தொழிலில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும்.

பிள்ளைகளின் வழியில் சுபச்செய்திகள் வந்து சேரும். இதுவரை படித்து முடித்தும் வேலையில்லாமல் இருந்த பிள்ளைகளுக்கு இப்பொழுது வேலை கிடைக்கும். பூர்வீக இடத்தைக் கொடுத்துவிட்டு புதிய இடம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.

சிறப்பு வழிபாடு

இல்லத்துப் பூஜை அறையில் விஷ்ணு-லட்சுமி படம் வைத்து திருமால் கவசமும், திருமகள் கவசமும் பாடி வழிபடுவது நல்லது. யோகபலம் பெற்றநாளில் திருவேங்கை வாசலில் உள்ள யோகம் தரும் குருதட்சிணாமூர்த்தியை வழிபட்டு வருவதன் மூலம் வளர்ச்சி அதிகரிக்கும்.

செவ்வாய் – சனி பார்வை மற்றும் சேர்க்கை
13.12.2021 முதல் 6.12.2021 வரை செவ்வாய்-சனி பார்வைக் காலம்:
26.2.2022 முதல் 6.4.2022 வரை மகரத்தில் செவ்வாய்- சனி சேர்க்கைக் காலம்:

இக்காலத்தில் மிகமிக கவனத்தோடு செயல்படுவது நல்லது. இருப்பினும் உங்கள் ராசியைப் பொறுத்தவரை 6-க்கு அதிபதி செவ்வாய் அஷ்டமாதிபதி சனியைப் பார்ப்பதால் எதிர்பாராத நல்ல திருப்பங்களும் ஏற்படும்.

ஒரு பெரும்தொகை இட விற்பனையால் கிடைக்கும். `கட்டிடம் கட்டியும், வாடகைக்கு விட முடியவில்லையே’ என்று கவலைப்பட்டவர்களுக்கு நல்ல யோகம் இப்பொழுது அமையும். இடமாற்றங்கள் இனிமை தரும். உத்தியோக மாற்றங்கள் உயர்விற்கு வழிகாட்டும்.

READ MORE >>>  இன்றைய ராசி பலன் - 11.11.2021

பெண்களுக்கான பலன்கள்

மிதுன ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்தக் குருப்பெயர்ச்சி சாதகமான பலன்களை அள்ளி வழங்கப்போகின்றது. குருவின் நேரடிப் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் தொட்டது துலங்கும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.

பிள்ளைகளின் கல்யாணக் கனவுகளை சிறப்பாக நடத்துவீர்கள். பணிபுரியும் பெண்களுக்கு கேட்ட சலுகைகள் கிடைக்கும். ஒருசிலருக்கு உத்தியோகத்தோடு சுயதொழில் செய்யும் முயற்சி கைகூடும். ஆதியந்தப் பிரபு வழிபாடு வளர்ச்சி தரும்

பன்னிரண்டு ராசிகளுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்- 13-11-2021 முதல் 12-11-2022 வரை

குருப்பெயர்ச்சி பலன்கள் – மேஷ ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- ரிஷப ராசி

புத்தாண்டு பலன்கள் – மிதுன ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- கடக ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- சிம்ம ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- கன்னி ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- துலாம் ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- விருச்சிக ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- தனுசு ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- மகர ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- கும்ப ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- மீன ராசி

ஏனைய தளங்களிற்கு செல்ல..

Previous articleகுருப்பெயர்ச்சி பலன்கள்- ரிஷப ராசி
Next articleகுருப்பெயர்ச்சி பலன்கள்- கடக ராசி