Home Astology குருப்பெயர்ச்சி பலன்கள்- ரிஷப ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- ரிஷப ராசி

ஆலோசனைகள் சொல்வதில் அசகாய சூரர்கள் என்று பெயர் பெற்ற ரிஷப ராசி அன்பர்களே! பத்தாமிடத்தில் குரு பகவான்; பதவியில் மாற்றம் உருவாகும்! பன்னிரண்டு ராசிகளுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்- ரிஷப ராசி 13-11-2021 முதல் 12-11-2022 வரை

குருப்பெயர்ச்சி பலன்கள்- ரிஷப ராசி

இதுவரை உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த குரு பகவான், 13.11.2021 முதல் 10-ம் இடமான தொழில் ஸ்தானத்தில் அடியெடுத்து வைக்கின்றார். 10-ல் ஒரு பாவியாவது இருக்க வேண்டும் என்பது ஜோதிட நியதி.

ஆனால் இப்பொழுது சுபகிரகமான குருவே அமரப்போகின்றார். உங்கள் ராசிக்கு 8, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. எனவே அவர் 10-ம் இடத்திற்கு வரும்பொழுது பெரியளவில் பாதிப்புகளை ஏற்படுத்த மாட்டார்.

10-ல் வந்த குருவால் ஏற்படும் பதவி மாற்றம் நல்ல மாற்றமாகவே இருக்கும். சிலருக்கு பணிபுரியும் இடத்தில் முக்கியப் பொறுப்புகள் கொடுக்கப்படலாம். சிலருக்கு பதவி நீடிப்புகள் ஏற்படலாம். பதவி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் சேரக்கூடிய வாய்ப்பு உருவாகலாம்.

குருவின் பார்வை பலன்

இந்த குருப்பெயர்ச்சியின் விளைவாக குரு பகவான் 2, 4, 6 ஆகிய இடங்களைப் பார்க்கின்றார். எனவே அந்த 3 இடங்களும் புனிதமடைகின்றன.

குருவின் பார்வை 2-ம் இடத்தில் பதிவதால் குடும்ப ஸ்தானம் பலப்படுகின்றது. அது, வாக்கு, தனம் எனப்படும் இடமாகவும் கருதப்படுவதால் வருமானம் அதிகரிக்கும்.

வாக்கு, நாணயம் காப்பாற்றப்படும். குருவின் பார்வை 4-ம் இடத்தில் பதிவதால் சுகங்களும், சந்தோஷங்களும் அதிகரிக்கும்.

உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். பணிபுரியும் இடத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். தாயின் உடல்நலம் சீராகும். குருவின் பார்வை 6-ம் இடத்தில் பதிவதால் எதிர்ப்பு, வியாதி, கடன் ஆகியவற்றைக் குறிக்கும் இடத்தில் எதிர்பார்த்த மாற்றங்கள் வந்து சேரும்.

READ MORE >>>  சந்திராஷ்டமம் இருப்பதால் கவனம் தேவை

பணி புரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். கேட்ட சலுகைகள் கிடைக்கும். உத்தியோக உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை தானாக வந்து சேரும்.

இதுவரை வாங்கிய கடனைக் கொடுத்து மகிழ்வீர்கள். சங்கிலித் தொடர்போல வந்த கடன் சுமை குறைந்து சந்தோஷத்தைக் கொடுக்கும்.

தொழிலை மேம்படுத்த அதற்கான முதலீடுகள் செய்ய விரும்புபவர்களுக்கு வங்கிகளின் ஒத்துழைப்பும், வள்ளல்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். அரசியல் மற்றும் பொதுநலத்தில் உள்ளவர்களுக்கு நல்ல பொறுப்பு கள் தேடிவரும்.

நட்சத்திர பாதசாரப்படி பலன்கள்

செவ்வாய் சாரத்தில் குரு சஞ்சாரம்(13.11.2021 முதல் 12.12.2021 வரை)

உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்குஅதிபதியானவர் செவ்வாய். களத்திர ஸ்தானம் மற்றும் விரய ஸ்தானத்திற்கு அதிபதியான செவ்வாய் சாரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் பொழுது சுபச்செலவுகள் அதிகரிக்கும்.

படித்து முடித்து வேலையில்லாமல் இருந்த வாழ்க்கைத் துணைக்கு இப்பொழுது வேலை கிடைக்கும். கணவன்-மனைவி இருவரும் ஆளுக்கொரு இடத்தில் இருந்து பணிபுரிந்தால், அவர்கள் ஒரே ஊரில் பணிபுரியும் வாய்ப்பு இனி அமையும்.

ராகு சாரத்தில் குரு சஞ்சாரம் (13.12.2021 முதல் 1.3.2022 வரை)

உங்கள் ராசியிலேயே ராகு பகவான் சஞ்சரிக்கின்றார். ராகு சுயபலமற்ற கிரகம். அவர் ஆரம்பத்தில் சுக்ரன் வீட்டில் சஞ்சரிக்கின்றார். எனவே சொத்து விற்பனையால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும்.

உத்தியோகத்தில் பணி ஓய்விற்குப் பிறகும் பணி நீடிப்பு கிடைக்கலாம். ஆபரணங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெண்வழிப் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும்.

சுய சாரத்தில் குரு சஞ்சாரம் (2.3.2022 முதல் 13.4.2022 வரை)

நன்மையும் தீமையும் கலந்தே நடைபெறும். காரணம், குரு உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு பகை கிரகமாவார். உங்கள் ராசிக்கு 8, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு.

READ MORE >>>  இன்றைய ராசி பலன் - 23.10.2021

அஷ்டம-லாபாதிபதியான குரு தன் சுய சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது இழப்புகளையும் கொடுப்பார். அதை ஈடுகட்ட லாபத்தையும் கொடுப்பார். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வெளிநாட்டில் உள்ள நல்ல நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம்.

ராகு-கேது பெயர்ச்சி காலம்

குருப்பெயா்ச்சி காலத்தில் 21.3.2022-ல் ராகு-கேது பெயர்ச்சி நிகழவிருக்கின்றது. இதுவரை உங்கள் ராசியில் சஞ்சரித்து வந்த ராகு, 12-ம் இடமான விரய ஸ்தானத் திற்கு செல்கின்றார். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த கேது 6-ம் இடத்திற்கு செல்ல இருக்கின்றார்.

மறைந்த ராகுவால் நிறைந்த தனலாபம் கிடைக்கும். தொழில் முன்னேற்றம் ஏற்படும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். வெளிமாநிலம் அல்லது ெவளிநாட்டில் பணிபுரிய வரும் வாய்ப்புகளைப் பற்றிச் சிந்திப்பீர்கள்.

சிறப்பு வழிபாடு

இல்லத்து பூஜை அறையில் சிவபெருமானின் குடும்பப் படம் வைத்து திருவாசகம் பாடி வழிபடுவது நல்லது. வாய்ப்பிருக்கும் பொழுது உங்களுக்கு அனுகூலமான நாளில் வைரவன்பட்டியில் இசைபாடும் கல்தூண்களுக்கு நடுவில் அமர்ந்து அருள்வழங்கும் தட்சிணாமூர்த்தியை வழிபட்டு திருப்தியான வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள்.

செவ்வாய் – சனி பார்வை மற்றும் சேர்க்கை
13.11.2021 முதல் 6.12.2021 வரை செவ்வாய்-சனி பார்வைக் காலம்:
26.2.2020 முதல் 6.4.2022 வரை மகரத்தில் செவ்வாய்- சனி சேர்க்கை காலம்:

இக்காலத்தில் மிக மிக கவனத்தோடு செயல்படுவது நல்லது. உங்கள் ராசிக்கு தர்ம கர்மாதிபதி யோகத்தை தரக்கூடியவர் சனி. அவரை சப்தம விரயாதிபதியான செவ்வாய் பார்ப்பதால் குடும்பத்தில் மனக்குழப்பங்கள் அதிகரிக்கும்.

குடியிருக்கும் வீட்டால் பிரச்சினைகள் வரலாம். கடுமையாக முயற்சித்தும் சில காரியங்கள் கைகூடாமல் போகலாம். வாகனத்தால் தொல்லை உண்டு. `வாங்கிய இடத்தை விற்கமுடியவில்லையே’ என்று கவலைப்படுவீர்கள்.

READ MORE >>>  இன்றைய ராசிபலன் - 19/07/2020

பெண்களுக்கான பலன்கள்

ரிஷப ராசியில் பிறந்த பெண்களுக்கு நினைத்த காரியம் நிைறவேறும். குருபார்வை குடும்ப ஸ்தானத்தில் பதிவதால் கணவன்-மனைவிக்குள் பாசமும், நேசமும் அதிகரிக்கும்.

பணிபுரியும் பெண்களுக்கு கேட்ட சலுகைகள் கிடைக்கும். சம்பள உயர்வுடன் கூடிய இடமாற்றங்கள் அமையும். வராஹி வழிபாடு வளர்ச்சியைக் கொடுக்கும்.

பன்னிரண்டு ராசிகளுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்- 13-11-2021 முதல் 12-11-2022 வரை

குருப்பெயர்ச்சி பலன்கள் – மேஷ ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- மிதுன ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- கடக ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- சிம்ம ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- கன்னி ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- துலாம் ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- விருச்சிக ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- தனுசு ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- மகர ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- கும்ப ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- மீன ராசி

ஏனைய தளங்களிற்கு செல்ல..

Previous articleகுருப்பெயர்ச்சி பலன்கள் – மேஷ ராசி
Next articleகுருப்பெயர்ச்சி பலன்கள்- மிதுன ராசி