Home Astology குருப்பெயர்ச்சி பலன்கள் – மேஷ ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள் – மேஷ ராசி

மனதில் பட்டதை மறைக்காமல் சொல்லும் மேஷ ராசி நேயர்களே! பதினோராமிடத்தில் குரு பகவான்; பார்க்கும் தொழிலில் லாபம் வரும்! பன்னிரண்டு ராசிகளுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்- மேஷ ராசி 13-11-2021 முதல் 12-11-2022 வரை

குருப்பெயர்ச்சி பலன்கள்- மேஷ ராசி

இதுவரை உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த குருபகவான், 13.11.2021 முதல் 11-ம் இடமான லாப ஸ்தானத்திற்கு வருகிறார். இது வரவை பெருக்கிக் கொடுக்கும் இடமாகும். எனவே தொழிலில் எதிர்பார்த் ததைக் காட்டிலும் கூடுதல் லாபம் கிடைக்கும்.

வாங்கிய கடனை கொடுத்து மகிழ்வீர்கள். புதிய தொழில் தொடங் கும் திட்டம் நிறைவேறும். உடல் நலம் சீராகி உற்சாகப்படுத்தும்.

வெளிநாடு தொடர்பான வகையில் வெற்றிக ரமான தகவல் வந்து சேரும். அடுக்கடுக்காக ஒப்பந்தங் கள் வந்து அலைமோதும். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும்.

வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை கிடைக்கலாம். உடன்பிறந்தவர் களோடு நல்லுறவு ஏற்படும். ஒரு சிலருக்கு கவுரவப் பதவிகளும் தேடிவரலாம். `

உத்தியோகத்தில் இருந்த படியே தொழில் செய்யலாமா?’ என்ற சிந்தனையும் மேலோங்கும். நினைத்த காரியங்களை நினைத்தபடியே முடிக்கக் கூடிய விதத்தில், இந்த குருப்பெயா்ச்சி அமைகின்றது.

குருவின் பார்வை பலன்

இந்த குருப்பெயர்ச்சியின் விளைவாக குரு பகவான் உங்கள் ராசிக்கு 3, 5, 7 ஆகிய இடங்களைப் பார்க்கிறார். அந்த மூன்று இடங்களுக்குரிய ஆதிபத்யங்கள் அனைத்தும் சிறப்பாக நடைபெறும். குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் பதிவதால், வெற்றிகள் ஸ்தானம் புனிதமடைகிறது.

READ MORE >>>  வருகிறது மகாசிவராத்திரி!! வரவேற்க தயாராகுங்கள்!!சிவராத்திரியில் ஒரு வரலாறு

எனவே தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். துணிந்து சில முடிவுகளை எடுத்து மற்றவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவீர்கள். வருமானம் போதுமானதாக இருக்கும். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர்.

குருவின் பார்வை 5-ம் இடத்தில் பதிவதால், பூர்வ புண்ணிய ஸ்தானம் பலம்பெறுகிறது. எனவே பூர்வ புண்ணியத்தின் பலனாக, உங்களுக்குக் கிடைக்க வேண்டிய அனைத்தும் கிடைக்கும் நேரம் இது. பழைய கடன்களைக் கொடுத்து மகிழ்வீர்கள்.

கரைந்த சேமிப்புகளை ஈடுகட்ட வழிபிறக்கும். நிரந்தர வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். நீடித்த நோய் அகலும். பெற்றோர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். பிள்ளைகளின் மேற்படிப்பு சம்பந்தமாகவோ, கல்யாணம் சம்பந்தமாகவோ எடுத்த முயற்சி பலன்தரும்.

குருவின் பார்வை 7-ம் இடத்தில் பதிவதால், களத்திர ஸ்தானம் புனிதமடைகிறது. எனவே இல்லற வாழ்க்கை இனிமையாக அமையும். தம்பதியர்களுக்குள் ஏற்பட்ட பிணக்குகள் அகலும்.

நட்சத்திர பாதசாரப்படி பலன்கள்
செவ்வாய் சாரத்தில் குரு சஞ்சாரம்(13.11.2021 முதல் 12.12.2021 வரை)

உங்கள் ராசிநாதனாகவும், 8-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்குபவர் செவ்வாய். ராசிநாதன் செவ்வாய் சாரத்தில் குரு சஞ்சரிப்பது யோகம்தான்.

‘குருமங்கள யோகம்’ என்ற அடிப்படையில் மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறும். தடைகள் அகலும். தனவரவு திருப்தி தரும். சுபவிரயங்கள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக பேசி வந்த வரன்கள் இப்பொழுது முடிவாகலாம்.

ராகு சாரத்தில் குரு சஞ்சாரம்(13.12.2021 முதல் 1.3.2022 வரை)

உங்கள் ராசிக்கு லாப ஸ்தானம் எனப்படும் கும்ப ராசியில் இடம்பெற்றிருக்கும் நட்சத்திரம் சதயம். இது ராகுவிற்குரிய நட்சத்திரம். அந்த ராகு பகவான் உங்கள் ராசிக்கு இரண்டாமிடமான தன ஸ்தானத்தில் இருக்கிறார்.

READ MORE >>>  இன்றைய ராசிபலன்- 28/06/2020, மேஷ ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்

இக்காலத்தில் தனவரவு தாராளமாக வந்து சேரும். எதிர்பார்த்தபடி நல்ல வேலை கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் உங்கள் திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும்.

சுய சாரத்தில் குரு சஞ்சாரம்(2.3.2022 முதல் 13.4.2022 வரை)

உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு பகவான். எனவே பெற்றோர் வழியில் இருந்த பிரச்சினைகள் அகலும். பிடிவாதக் குணத்தை தளர்த்திக் கொண்டு செயல்படுவது நல்லது. உற்றார், உறவினர்கள் உங்கள் முன்னேற்றம் கண்டு ஆச்சரியப்படுவர். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். கணிசமான தொகை கைகளில் புரளும்.

ராகு-கேது பெயர்ச்சிக் காலம்

குருப்பெயர்ச்சி நடைபெறும் காலத்தில், 21.3.2022-ல் ராகு-கேது பெயர்ச்சி நிகழ இருக்கிறது. இதுவரை உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த ராகுபகவான், உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கப்போகிறார்.

இதன் பயனாக, சில நல்ல மாற்றங்கள் உங்களுக்கு வரலாம். ஊர் மாற்றம், இடமாற்றம் என்று எதுவாக இருந்தாலும், வரும் மாற்றங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவே இருக்கும். அதே நேரம் சப்தம ஸ்தானத்திற்கு கேது வருவதால், குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

சிறப்பு வழிபாடு

இல்லத்து பூஜை அறையில் பஞ்சமுக விளக்கேற்றி வைத்து வலம்புரி விநாயகரையும், குருபகவான் படம் வைத்து குருவையும் வழிபட்டு வாருங்கள்.

செவ்வாய் – சனிபார்வை மற்றும் சேர்க்கை

13.11.2021 முதல் 6.12.2021 வரை செவ்வாய் – சனி பார்வையும், 26.2.2022 முதல் 6.4.2022 வரை மகரத்தில் செவ்வாய் – சனி சேர்க்கையும் ஏற்படுகிறது.

இந்த இரண்டு காலகட்டங்களிலும், மிகமிக கவனத்தோடு செயல்படுவது நல்லது. எதிர்மறைச் சிந்தனை களைத் தவிர்க்க வேண்டும். நேர்மறைச் சொற்களையே அதிகம் உபயோகப்படுத்துங்கள். பிடிவாதக் குணத்தால் பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும்.

READ MORE >>>  இன்றைய ராசி பலன் - 12.11.2021

குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு ஆரோக்கியத் தொல்லைகளும், மருத்துவச் செலவுகளும் ஏற்படலாம். தொழில் மற்றும் உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காது.

வழிபாடுகளையும், பரிகாரங்களையும் மேற்கொள்வதோடு, அனுபவஸ்தர்களின் ஆலோசனைகளையும், அருளாளர்களின் ஆசியையும் பெற்று செயல்படுவது நல்லது.

பெண்களுக்கான பலன்கள்

இந்த குருப்பெயர்ச்சியால் பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். தொழில் வளர்ச்சியும், எதிர்பார்த்த லாபமும் கிடைக்கும். பணிபுரியும் பெண்களுக்கு திறமைக்குரிய அங்கீகாரம் கிடைத்து, முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பார்கள்.

கணவன் – மனைவிக்குள் அன்பும், அரவணைப்பும் அதிகரிக்கும். பிள்ளை களால் உதிரி வருமானம் உண்டு. திருமணம் போன்ற சுபகாரியங்கள் இல்லத்தில் நடைபெறும். கற்பக விநாயகர் வழிபாடு கவலையைப் போக்கும்.

பன்னிரண்டு ராசிகளுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்- 13-11-2021 முதல் 12-11-2022 வரை

குருப்பெயர்ச்சி பலன்கள்- ரிஷப ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- மிதுன ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- கடக ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- சிம்ம ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- கன்னி ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- துலாம் ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- விருச்சிக ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- தனுசு ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- மகர ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- கும்ப ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- மீன ராசி

ஏனைய தளங்களிற்கு செல்ல..

Previous articleதற்கொலை செய்த இளம் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது.
Next articleகுருப்பெயர்ச்சி பலன்கள்- ரிஷப ராசி