Home Astology இன்றைய ராசி பலன் – 14.11.2021

இன்றைய ராசி பலன் – 14.11.2021

பிலவ வருடம் ஐப்பசி 28ஆம் தேதி நவம்பர் 14,2021 ஞாயிற்றுக்கிழமை.ஏகாதசி திதி முழுநாள்பூரட்டாதி நட்சத்திரம் மாலை 03.24மணி வரை அதன் பின் உத்திரட்டாதி. சந்திரன் இன்றைய தினம் கும்ப ராசியில் பயணம் செய்கிறார். கடக ராசிக்காரர்களுக்கும் சிம்ம ராசிக்காரர்களுக்குட சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கவும்.

மேஷம்

சந்திரன் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்திற்கு வருகிறார். இன்று உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் காணப்படும். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு நம்பிக்கையை கொடுக்கும். சிந்தித்து செயல்பட்டால் வியாபாரத்தில் லாபம் அடையலாம். வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

ரிஷபம்

சந்திரன் லாப ஸ்தானத்திற்கு வருகிறார். இன்று உங்களுக்கு எந்த ஒரு கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிவு உண்டாகும். வேலையில் பணியாட்கள் தம் பொறுப்பறிந்து செயல்படுவார்கள். தொழில் சம்பந்தமான வங்கி கடன் எளிதில் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். தடைப்பட்ட சுபகாரியம் கை கூடும்.

மிதுனம்

சந்திரன் பத்தாம் வீட்டிற்கு வருகிறார். இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக அமைந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படும். உறவினர்களின் உதவியால் கடன் பிரச்சினைகள் ஓரளவு தீரும். குடும்பத்தில் உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

கடகம்

சந்திரன் ஒன்பதாம் வீட்டிற்கு வருகிறார். இன்று பகல் 10.11 மணி வரை உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் சிறு சஞ்சலங்கள் வாக்குவாதங்கள் ஏற்படும். செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். சுபகாரியங்களை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் மேலதிகாரிகளுடன் பேசும் போது நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். கடந்த 2 நாட்களாக இருந்த பிரச்சினைகள் நீங்கும்.

READ MORE >>>  குருப்பெயர்ச்சி பலன்கள்- கடக ராசி

சிம்மம்

சந்திரன் எட்டாம் வீட்டிற்கு வருகிறார். இன்று பகல் 10.11 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் தொடங்குகிறது. பேச்சில் நிதானமும் கவனமும் தேவை. பெரிய அளவில் முதலீகளைத் தவிர்க்கவும். குடும்பத்தில் உறவினர்களிடையே வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும்.

கன்னி

சந்திரன் ஏழாம் வீட்டிற்கு வருவதால் இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீர்ந்து சுமுக நிலை ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அனுகூலப் பலன் கிட்டும். உற்றார் உறவினர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். உத்தியோக ரீதியாக வெளிவட்டார நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும்.

துலாம்

சந்திரன் ஆறாம் வீட்டிற்குள் நுழைகிறார். இன்று உங்களுக்கு உடலில் சிறுசிறு உபாதைகள் ஏற்படும். குடும்பத்தில் பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாகக்கூடும். வியாபாரம் செய்வோர் கொடுக்கல் வாங்கலில் நிதானமாக செயல்படுவது மூலம் லாபம் அடையலாம். வேலையில் சக நண்பர்களை அனுசரித்து செல்வது நல்லது. கடன் வாங்குவதைத் தவிர்க்கவும்.

விருச்சிகம்

சந்திரன் ஐந்தாம் வீட்டிற்கு வருகிறார். இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். சகோதர, சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள். தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகளில் அனகூலமான பலன்கள் கிடைக்கும். திருமண சுபகாரியங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும்.

தனுசு

சந்திரன் நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்றைய தினம் மன அமைதி ஏற்படும். நிம்மதியும் சந்தோஷமும் அடைவீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. திடீர் மருத்துவ செலவுகள் வரும்.

READ MORE >>>  இன்றைய ராசி பலன் - 15.11.2021

மகரம்

சந்திரன் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உறவினர்களால் தேவையற்ற பிரச்சினைகள் தோன்றும். குடும்ப செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபத்தை அடைய முடியும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

கும்பம்

சந்திரன் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பூர்வீக சொத்துக்களால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடித்து வெற்றி அடைவீர்கள். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சேமிப்பு உயரும்.

மீனம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசியில் நுழைகிறார். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் இடையூறுகள் உண்டாகும். பிள்ளைகளுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்படும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் அனுகூலப் பலன் கிடைக்கும்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

Previous articleHNB Bank Management Trainee Vacancy 2021
Next article16 வயது மாணவியை கடத்தி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவர்கள் கைது!