Home Local news வவுனியா தமிழ் பாடசாலையொன்றில் 10 மாணவர்களிற்கு கொரோனா!

வவுனியா தமிழ் பாடசாலையொன்றில் 10 மாணவர்களிற்கு கொரோனா!

வவுனியா வடக்கு வலய பாடசாலை ஒன்றில் 10 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா மறவன்குளம் பாரதி வித்தியாலயத்தில் கல்வி பயிலும் தரம் 5 மாணவனுக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் குறித்த மாணவனுக்கு நேற்று முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் ட் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து மாணவனுடன் தொடர்புடைய ஏனைய மாணவர்களுக்கு இன்று (13) துரித அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது அப் பாடசாலையைச் சேர்ந்த தரம் 5 மாணவர்கள் 7 பேருக்கும், தரம் 11 மாணவர்கள் இருவருக்கும் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து தொற்றுக்குள்ளான மாணவர்கள் சிகிச்சைக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், மேலதிக நடவடிக்கைகளையும் சுகாதாரப் பிரிவினர் எடுத்துள்ளனர்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  கொத்துரொட்டி வாங்கச் சென்ற இளைஞன் கடை உரிமையாளரால் அடித்துக் கொலை!
Previous articleஅரச ஊழியர்கள் நாட்டுக்கு பெரும் சுமை; நிதியமைச்சர்.
Next articleகுருப்பெயர்ச்சி பலன்கள்- கும்ப ராசி