Home CRIME NEWS பொலிசாரின் மனைவி தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு; கள்ளத்தொடர்பு காரணமா?

பொலிசாரின் மனைவி தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு; கள்ளத்தொடர்பு காரணமா?

புத்தளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புத்தளம் ஜயபிம பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் ஒன்று நேற்று (12) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதை அவதானித்த அப்பகுதி மக்கள் இது தொடர்பில் புத்தளம் பொலிஸாருக்குத் தகவலை வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து பொலிஸார் குறித்த பகுதிக்குச் சென்று வீட்டை சோதனை செய்து பார்த்தபோது தூக்கில் தொங்கிய நிலையில் அழுகிக் காணப்பட்ட பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது.

உயிரிழந்தவர் மாதம்பை பகுதியைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரின் மனைவியாக இருக்கலாமென புத்தளம் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சடலமாக மீட்கப்பட்ட குறித்த பெண், 3 வாரங்களுக்கு முன்னர் குறித்த வீட்டுக்கு வாடகைக்கு குடிபுகுந்ததாகவும் இந்நிலையில் ஒருவருடன் அவர் தொடர்பை பேணியமையும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவ இடத்துக்குச் சென்ற புத்தளம் மாவட்ட பதில் நீதிவான் எம்.எம்.இக்பால், சடலத்தை பார்வையிட்டு நீதிவான் விசாரணையை நடத்தினார்.

அத்துடன், குறித்த பெண்ணோடு தொடர்பிலிருந்தவரை உடனடியாகக் கைது செய்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறும், பதில் நீதிவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
மீட்கப்பட்ட சடலம் புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
புத்தளம் பொலிஸாரும், தடயவியல் பொலிஸாரும் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  கைதடியை சேர்ந்த அரச உத்தியோகஸ்த்தர் உட்பட 16 பேருக்கு தொற்று
Previous articleயாழில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள இளம் குடும்பஸ்தரின் உயிரிழப்பு!
Next articleமணப்பெண்ணை 3ஆவது மனைவியாக்க விரும்பி மணமகனை கொலை செய்த இளைஞனால் பரபரப்பு!