Home Local news பிழையான தகவலை பாராளுமன்றத்தில் வெளியிட்ட பசில்

பிழையான தகவலை பாராளுமன்றத்தில் வெளியிட்ட பசில்

கோவிட் தொற்று நோய் காரணமாக அரசாங்கத்திற்கு 500 பில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட உரையை ஆரம்பிக்கும் போது நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் கடந்த செப்டெம்பர் மாதம் 7ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பசில் ராஜபக்ஷ கோவிட் தொற்று நோய் காரணமாக அரசாங்கத்திற்கு 1500 – 1600 பில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

அதற்கமைய இந்த உரை முழுமையாக பிழையானதென தென்னிலங்கை ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை விடுதியில் கொரோனா
Previous articleஇலங்கையில் வாகனங்களின் விலைகளில் ஏற்படும் திடீர் மாற்றம்
Next articleயாழில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள இளம் குடும்பஸ்தரின் உயிரிழப்பு!