Home Astology இன்றைய ராசி பலன் – 13.11.2021

இன்றைய ராசி பலன் – 13.11.2021

பிலவ வருடம் ஐப்பசி 27ஆம் தேதி நவம்பர் 13,2021 சனிக்கிழமை. தசமி திதி மறுநாள் விடிகாலை 05.48 மணி வரை அதன் பின் ஏகாதசி திதி. சதயம் நட்சத்திரம் பகல் 03.24மணி வரை அதன் பின் பூரட்டாதி. சந்திரன் இன்றைய தினம் கும்ப ராசியில் பயணம் செய்கிறார். கடக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.

மேஷம்

சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். உடல்நிலையில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் சீராகும். சுபசெய்திகள் தேடி வரும். குடும்பத்தில் மனமகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுக்கடங்கி இருக்கும். குடும்பத்தோடு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும்.

ரிஷபம்

சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்றைய தினம் நீங்கள் முயற்சி செய்யும் காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும் வங்கி சேமிப்பு அதிகரிக்கும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

மிதுனம்

சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று பொருளாதார ரீதியான நெருக்கடிகள் ஏற்படலாம். பெண்களுக்கு மன மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். உடல் ஆரோக்கியத்திலும் இருந்த மந்த நிலை நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும். புதிய முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். சகோதர சகோதரிகள் வழியில் சாதகமான பலன் கிட்டும்.

READ MORE >>>  இன்றைய ராசி பலன் - 05.12.2021

கடகம்

சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். புதிய முயற்சிகளை ஒத்திப்போடவும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் தேவையில்லாமல் பேச வேண்டாம். வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.

சிம்மம்

சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். குடும்பத்தில் பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உறவினர்களுடனான சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும்.

கன்னி

சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். உடன்பிறந்தவர்கள் மூலம் சுபசெய்திகள் தேடி வரும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் செலவுகளை குறைத்து கொள்ள முடியும். பணவரவு தாராளமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் நீங்கி முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

துலாம்

சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். பணம், விலை உயர்ந்த பொருட்களை பத்திரப்படுத்தவும். பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.

READ MORE >>>  இன்றைய ராசி பலன் - 14.11.2021

விருச்சிகம்

சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் பயணம் செய்கிறார்.
பொருளாதார நெருக்கடிகள் நீங்கும். சுபகாரிய முயற்சிகளில் ஏற்பட்ட தடைகள் நீங்கி ஓரளவு சாதகமான பலன்கள் கிடைக்கும். பிள்ளைகளால் எதிர்பாராத வீண் விரய செலவுகள் உண்டாகும். பணப் பிரச்சனைகள் சற்று குறையும். வெற்றிகரமான நாளாக அமையும்.

தனுசு

சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் செய்யும் செயல்களில் வெற்றி கிடைக்கும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கைக்கு வந்து சேரும். திருமண சுப காரிய முயற்சிகளில் நன்மைகள் உண்டாகும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். வீட்டு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.

மகரம்

சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் வரும். குடும்பத்தில் பெரியவர்கள் ஆறுதலாக இருப்பார்கள். வீட்டில் பெண்களுக்கு பணிச்சுமை குறையும். சுப விரைய செலவாக மாற்றுங்கள். திருமண முயற்சிகளில் தாமதங்கள் ஏற்படலாம். மனநிம்மதியும் சந்தோஷமும் உண்டாகும்.

கும்பம்

சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்குள் பயணம் செய்கிறார். சுப காரிய முயற்சி செய்யலாம். நல்ல செய்திகள் தேடி வரும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை கொடுக்கும். வருமானம் அதிகரிக்கும் கடன் பிரச்சினை நீங்கும். வீட்டிற்குத் தேவையான புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும்.

READ MORE >>>  இன்றைய ராசி பலன் - 04.12.2021

மீனம்

சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். உறவினர்கள் வீட்டு விஷேசங்களில் பங்கேற்பீர்கள். கடன் பிரச்சினை நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சுப விரைய செலவுகள் செய்வீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கும்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

Previous articleஇன்றைய ராசிபலன் – 13/11/2021, சிம்ம ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்
Next articleபணத்தை உடனடியாக செலுத்துமாறு மக்கள் வங்கிக்கு சீன நிறுவனம் அழுத்தம்;