Home Local news போலி ஆவணம் தயாரித்து காணியை விற்பனை செய்தவர் திருமலையில் கைது!

போலி ஆவணம் தயாரித்து காணியை விற்பனை செய்தவர் திருமலையில் கைது!

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் காணியொன்றுக்கு போலியான ஆவணங்களை சரிசெய்து விற்பனை செய்த சந்தேக நபர் ஒருவரை இம்மாதம் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் இன்று(12) உத்தரவிட்டார்.

திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபர் திருகோணமலை பகுதியில் உள்ள காணியொன்றுக்கு போலியான முறையில் காணி உறுதிப்பத்திரங்களை தயார் செய்து விற்பனை செய்துள்ளதாகவும், அந்த காணியின் உரிமையாளர் வெளிநாடு ஒன்றில் வசித்து வருவதாகவும் தெரியவருகின்றது.

குறித்த சந்தேக நபர் வெளிநாடு அனுப்புவதாக கூறி பணம் பெற்றுள்ளதாகவும் விசாரணைகள் மூலம் தெரிய வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமையவே தாம் அவரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சந்தேக நபரை இன்று பொலிஸார் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே தொடர்ந்தும் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  யாழில் இளம் யுவதி தீடிரென உயிரிழந்ததால் பரபரப்பு!
Previous articleமட்டக்களப்பில் கார் – மோட்டார் சைக்கிள் விபத்து பாடசாலை மாணவன் காயம்.
Next articleவரவு செலவு திட்டம் – உள்ள சிறப்பு அம்சங்கள்