Home Accident News மட்டக்களப்பில் கார் – மோட்டார் சைக்கிள் விபத்து பாடசாலை மாணவன் காயம்.

மட்டக்களப்பில் கார் – மோட்டார் சைக்கிள் விபத்து பாடசாலை மாணவன் காயம்.

மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்திற்குட்பட்ட பார்வீதியில் இன்று பிற்பகல் மகிழூந்து ஒன்று மோட்டார் சைக்கிளில் மோதியதில் பாடசாலை மாணவன் ஒருவர் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு பார்வீதியில் பாடசாலை முடிந்ததும் மகனை ஏற்றிச்சென்றவரின் மோட்டார் சைக்கிளுடனேயே குறித்த மகிழூந்து வேகமாகச் சென்று மோதியுள்ளது.

இதன்போது பாடசாலை மாணவனும் அவரது தந்தையும் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வீதியில் மறுபுறம் தனது பயணப்பாதையில் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் மீதே மகிழூமோதியுள்ளது. மகிழூந்தை செலுத்தி வந்தவர் மதுபோதையுடன் காணப்பட்டதாக சம்பவத்தினை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

மகிழூந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Gallery Gallery Gallery Gallery Gallery

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  15 பேரை பலியெடுத்த பசறையில் விபத்துக்குள்ளான பஸ் மீட்கப்பட்டது!
Previous articleபாணில் நத்தை காணப்பட்டதால் பரபரப்பு!
Next articleபோலி ஆவணம் தயாரித்து காணியை விற்பனை செய்தவர் திருமலையில் கைது!