Home Local news பாணில் நத்தை காணப்பட்டதால் பரபரப்பு!

பாணில் நத்தை காணப்பட்டதால் பரபரப்பு!

வெதுப்பக உணவு உற்பத்திகளை விநியோகிக்கும் நடமாடும் முச்சக்கர வண்டியில் விற்பனை செய்யப்பட்ட பாணுக்குள் நத்தை காணப்பட்ட சம்பவம் ஒன்று இங்கிரிய பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

இந்த பாணை கொள்வனவு செய்த நபர் இது குறித்து முச்சக்கர வண்டியில் வந்த விற்பனையாளர் மற்றும் வெதுப்பக உரிமையாளருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

எனினும் பாணில் நத்தை இருந்தமைக்கு தாம் எதனையும் செய்ய முடியாது என அவர்கள் பதிலளித்துள்ளதாக தெரியவருகிறது.

இதனையடுத்து அந்த நபர் சம்பவம் குறித்து இங்கிரிய சுகாதார வைத்திய அதிகாரியின் அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருவதாக சுகாதார வைத்திய அதிகாரியின் அலுவலகம் கூறியுள்ளது.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  பாடசாலையில் சக மாணவிக்கு தாலி கட்டிய மாணவனால் பரபரப்பு!
Previous articleமுல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் வீடு புகுந்து தாக்குதல் நடத்தி நகைகள் கொள்ளை!
Next articleமட்டக்களப்பில் கார் – மோட்டார் சைக்கிள் விபத்து பாடசாலை மாணவன் காயம்.