Home world news தனது சொந்த மகளை திருமணம் செய்தவர் சிறையில்!

தனது சொந்த மகளை திருமணம் செய்தவர் சிறையில்!

தனது சொந்த மகளுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதுடன் அந்த யுவதியை திருமணம் செய்து தனது மனைவியாக்கிக்கொண்ட நபர் ஒருவருக்கு அமெரிக்க நீதிமன்றம் 2 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.

40 வயதான ட்ராவிஸ் பீல்ட்குரோவ் என்பவருக்கே இத்தண்டனை விதிக்கப்பட்டது.  அவர் தனது மகள் சமந்தா கேர்ஸ்னர் எனும் யுவதியுடன் தகாத உறவில் ஈடுபட்டதாக குற்றம்சுமத்தப்பட்டிருந்தார்.

ட்ராவீஸ் பீல்ட்குரொவ் – சமந்தா கேர்ஸ்னர்

அமெரிக்காவின் நெப்ரஸ்கா மாநிலத்தைச் சேர்ந்த ட்ராவிஸ் பீல்ட்குரோவ், ஏற்கெனவே திருமணம் செய்தவர். தனது மகள் சமந்தா கேர்ஸ்னர் பிறந்தவுடன் சமந்தாவையும் தனது மனைவியையும் ட்ராவிஸ் பீல்ட்குரோவ் பிரிந்து சென்றுதுடன் மற்றொரு பெண்ணுடன் இணைந்து வாழ ஆரம்பித்தார்.

வருடங்கள் செல்லச் செல்ல வளர்ந்துகொண்டிருந்த சமந்தா, தனது தாயார் மூலம் தனது தந்தையை தேட ஆரம்பித்தார்.

சமந்தாவுக்கு 17 வயதானபோது அவருக்கும் அவரின் தந்தையான தனது முன்னாள் கணவருக்கும் இடையிலான சந்திப்புக்கு சமந்தாவின் தாயார் ஏற்பாடு செய்தார்.

பல வருடங்களாக தான் தேடிய தந்தையை கண்டுபிடித்ததில் அளவில்லா மகிழ்ச்சியடைந்தார் சமந்தா. இருவரும் தந்தை மகளாக பழக ஆரம்பித்தனர்.

ட்ராவீஸ் பீல்ட்குரொவ் -சமந்தா கேர்ஸ்னர்

ஆனால், பின்னர் ட்ராவிஸுக்கும் சமந்தாவுக்கும் இடையிலான தந்தை மகள் உறவு விகாரமடையைத் தொடங்கியது. 3 வருடங்களின் பின் இவர்கள் உடல் உறவிலும் ஈடுபடத் தொடங்கினர்.

இது தொடர்பாக சமந்தாவின் தாயார் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தார். இதையடுத்து ட்ராவிஸிடமும் சமந்தாவிடமும் பொலிஸார் விசாரணை நடத்தினர்.

அப்போது தாம் இருவரும் காதலிப்பதாகவும், உடலுறவில் ஈடுபடுவதாகவும் 40 வயதான ட்ராவிஸ் பீல்ட்குரோவும் 20 வயதான சமந்தாவும் பொலிஸாரிடம் ஒப்புக்கொண்டனர். ஆனால் தாம் தந்தை மகள் அல்லர் என இருவரும் கூறினர்.

READ MORE >>>  14 வயது மாணவனுடன் பாலியல் உறவில் இருந்த ஆசிரியைக்கு சிறை!

இவர்கள் மீதான பொலிஸ் விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே இருவரும் திருமணமும் செய்துகொண்டனர்.

தகாத உறவில் ஈடுபட்டதாக இவர்கள் மீது நீதிமன்றில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

சுமந்தாவின் பிறப்புச் சான்றிதழில் தனது பெயர் இல்லை எனவும், இதனால் சமந்தாவுக்கு தான் தந்தை என நம்பவில்லை எனவும் ட்ராவிஸ் பீல்ட்குரோவ் நீதிமன்றில் கூறினார்.

எனினும், மரபணு பரிசோதனையின் மூலம் சமந்தாவுக்கு ட்ராவிஸ் தந்தையாக இருப்பதற்கு 99.999 சதவீதம் வாய்ப்புள்ளது என நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, ட்ராவிஸுடன் யார் முதலில் உறவு கொள்வது என தனது ஒன்றுவிட்ட சகோதரியுடன் செய்துகொண்ட பந்தயமே ட்ராவிஸுடன் தான் உடலுறவில் ஈடுபடத் தூண்டியதாக  அதிகாரிகளிடம் சமந்தா கூறினார்.

இந்நிலையில் மேற்படி வழக்கில் ட்ராவிஸ் பீல்ட்குரோவுக்கு 2 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன் சிறையிலிருந்து விடுதலையானபின் பின் சமந்தாவுடன் அவர் தொடர்புகொள்ளக் கூடாது எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதேவேளை சமந்தா கேர்ஸ்னர் ஏற்கெனவே சிறையிலிருந்த 22 நாட்கள் அவருக்கான சிறைத்தண்டனை காலமாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் அவர் 9 மாதங்கள் நன்னடத்தை கண்காணிப்பில் இருக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

Previous articleதிருகோணமலையில் மர்மமாக உயிரிழந்த யானைகள்
Next articleபடக்குழுவினரை ஆச்சரியத்தில் ஆழ்த்திய சோனியா அகர்வால்!