Home world news 14 வயது மாணவனுடன் பாலியல் உறவில் இருந்த ஆசிரியைக்கு சிறை!

14 வயது மாணவனுடன் பாலியல் உறவில் இருந்த ஆசிரியைக்கு சிறை!

14 வயது மாணவனுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதுடன் அந்த மாணவனுடன் இத்தொடர்பை துண்டித்துக்கொள்ள முற்பட்டபோது, அவன் மூலம் தான் கர்ப்பிணியாக இருப்பதாக கூறி அச்சுறுத்திய பிரித்தானிய பாடசாலை ஆசிரியையான 25 வயது யுவதிக்கு 5 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பத்தினா ஹொசைன் எனும் இந்த யுவதி, இங்கிலாந்தின் மேற்கு சசெக்ஸ் பிராந்தியத்திலுள்ள பாடசாலையொன்றில் ஆசிரியையாக பணியாற்றியவர்.

சட்டத்தரணியாக வேண்டும் என விரும்பிய அவர், றோஹாம்டன் பல்கலைக்கழகத்தில் பூகோள குற்றவியல் துறையில் முதுமாணி பட்டப்படிப்பையும் பூர்த்தி செய்திருந்தார்.

ஆனால், தனது விபரீத பாலியல் இச்சைகளால் அவர் குற்றவாளியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

14 வயது மாணவனுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டதையடுத்து 2020 ஜூன் மாதம் முதல் தடiயாக பத்தினா ஹொசைன் கைது செய்யப்பட்டிருந்தார்.

பிணையில் அவர் விடுதலையானவுடன், தனக்கு எதிரான பொலிஸ் விசாரணைகளை நிறுத்துவதற்கு அழுத்தம் கொடுப்பதற்காக அச்சிறுவனின் குடும்பத்தினரை தொந்தரவுக்குள்ளாக்கும் செயற்பாடுகளை பத்தினா ஹொசைன் ஆரம்பித்தார் எனவும் குற்றம் சுமத்தப்பட்டது.

இதற்காக போலி சமூக வலைத்தளக் கணக்குகளை அவர் பயன்படுத்தினார் எனவும் குற்றம் சுமத்தப்பட்டது. அதிகாரிகளிடம் தனக்கு எதிராக ஏனைய சிறுவர்கள் பேசுவதை தடுப்பதற்கும் பத்தினா ஹொசைன் முயற்சித்தார் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேற்படி சிறுவன் பாலியல் தொடர்புகளை துண்டித்துக்கொள்ள முற்பட்டபோது, அவன் மூலம் தான் கர்ப்பிணியாகவுள்ளதாக பத்தினா ஹொசைன் அச்சுறுத்தினார் எனவும் குற்றம் சுமத்தப்பட்டது.

குறித்த சிறுவனின் குடும்பத்திலுள்ள ஆண் ஒருவரை வேலையிலிருந்து விலக்க வைப்பதற்கு பத்தினா ஹொசைன் முயன்றதுடன், அவரை கைது செய்ய வைப்பதற்காக பொலிஸாரிடம் பொய்யான முறைப்பாடுகளையும் செய்திருந்தார்.  ஆனால், அம்முறைப்பாடுகள் பொய்யானவை என்பதற்கான ஆதாரங்கள் கடந்த மார்ச் மாதம் பொலிஸாருக்குக் கிடைத்தன என நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.

READ MORE >>>  தனியார் பேருந்தில் பயணித்த 19 வயதுடைய யுவதி துஷ்பிரயோகம்

இது தொடர்பாக பிறைட்டன் கிரவுண் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், பத்தினா ஹொசைனுக்கு 5 மாதங்கள் மற்றும் 4 மாத சிறைத்தண்டனை விதித்து நீதிபதி  ஜெரமி கோல்ட் தீர்ப்பளித்தார்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

Previous article“ஒரே நாடு – ஒரே சட்டம்” ஜனாதிபதி செயலணிக்கு தமிழர்கள் மூவர் நியமனம்.
Next articleமுற்சக்கரவண்டிகளுக்கு புதிய நடைமுறைகள் அமுல்!