Home Tamil News காரைநகர் கடற்கரையில் கரையொதுங்கிய மீனவர் சடலம்

காரைநகர் கடற்கரையில் கரையொதுங்கிய மீனவர் சடலம்

கடல் சீற்றம் காரணமாக நடுக்கடலில் தவறி விழுந்த இந்திய மீனவரொருவரின் சடலம் காரைநகர் கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளது.

தமிழகத்தின் நாகை மாவட்டத்தில் இருந்து கடந்த 2ஆம் திகதி மூவர் மீன்பிடிக்க கடலுக்குள் சென்ற நிலையில் கடல் சீற்றம் காரணமாக படகிலிருந்து மீனவர் ஒருவர் கடலில்தவறி விழுந்து மாயமாகியுள்ளார்.

மாயமான மீனவரை கடந்த 4 நாட்களாக சக மீனவர்கள் தேடிவந்த நிலையில் நேற்று மதியம் அவர் காரைநகர் கடற்கரையில் சடலமாக கரை ஒதுங்கியுள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  15வயது சிறுமியை 7 மாத கர்ப்பிணி ஆக்கிய இளைஞன் மாட்டினார்
Previous articleஇன்றைய ராசி பலன் – 09.11.2021
Next article2வது மனவியுடன் பிறந்தநாளை கொண்டாடிய கருனா; முதல் மனவியிடமிருந்து வந்த செய்தி