Home cinema news ஜெய்பீம் படத்தின் அந்த காட்சி – கொந்தளிக்கும் ஒட்டர் சமூகம்

ஜெய்பீம் படத்தின் அந்த காட்சி – கொந்தளிக்கும் ஒட்டர் சமூகம்

தாழ்த்தப்பட்டவர்களுக்கு காவல்துறையில் நடக்கும் அநீதிகளை எடுத்துச்சொல்லும் படம் ஜெய்பீம்.

சாதிவெறிக்கு எதிராக வீசப்பட்ட சாட்டை என்று ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.

சூர்யா நடிப்பில் ஐந்து மொழிகளில் வெளிவந்திருக்கும் இப்படம் குறித்த விவாதங்களும் விமர்சனங்களும் கடந்த சில தினங்களை ஊடகங்களை ஆக்கிரமித்திருக்கின்றன.

இந்நிலையில், இந்தப்படத்தில் ஒட்டர் சமூகத்தை இழிவுபடுத்தும் காட்சிகள் இருப்பதாகவும் அதை நீக்காவிட்டால் படத்தின் இயக்குனர் வீட்டை முற்றுகையிடப் போவதாகவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாகவும் எச்சரித்திருக்கிறார் உழைக்கும் மக்கள் விடுதலை கழக நிறுவனத்தலைவர் தேக்கமலை.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில்,

’’ஜெய்பீம் என்ற படம் வெளியாகியிருக்கிறது. சூர்யா நடித்து ஞானவேல் படத்தை இயக்கியிருக்கிறார்.

அந்த படத்தில் ஒட்டர் சமூகம் உட்பட பல சமூகத்தினரை இழிவு படுத்தி ஓரமாக நிற்க வைக்கும் காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது .

இந்த காட்சி ஒட்டர் சமூக மக்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது’’என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ‘’நாட்டின் கட்டுமான வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும் ஒட்டர் சமூகத்தை இழிவு படுத்துகின்ற வகையில் அமைந்திருக்கும் காட்சியை படத்திலிருந்து நீக்க வேண்டும்.

அந்த காட்சியில் போலீசார் பொய் வழக்கு போட ஒட்டர் சமூகத்தை பயன்படுத்திக் கொள்ளும் வகையிலான வசனம் இடம்பெற்றிருக்கிறது.

அதையும் நீக்க வேண்டும். இல்லை என்றால் சென்னையில் அப்படத்தின் இயக்குனர் ஞானவேல் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம். நீதிமன்றத்திலும் வழக்கு தொடருவோம்’’ என்று எச்சரித்திருக்கிறார்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  போதைப்பொருள்…..உல்லாசம்… மீராவுக்கு உதவியதால் சிக்கிய பிரபல தோழி….!
Previous articleஇன்றைய ராசிபலன் – 04/11/2021, துலாம் ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்
Next articleஇன்றைய ராசி பலன் – 04.11.2021