Home world news பெண்கள் ஆடையை களைந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு!

பெண்கள் ஆடையை களைந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு!

இத்தாலிய விமான சேவை நிறுவனமான அல்இத்தாலியாவின் முன்னாள் விமானப் பணிப்பெண்கள் பலர் அண்மையில் சீருடையைக் களைந்து உள்ளாடையுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இத்தாலியத் தலைநகர் ரோமின் மத்தியில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சுமார் 30 பெண்கள் இதில் பங்குபற்றினர்.

அல்இத்தாலியா (Alitalia)  நிறுவனத்தை ஐ.ரி.ஏ. எயார்வேஸ்  (ITA Airways) எனும் நிறுவனம் வாங்கியுள்ளது.

இந்நிலையில், அல் இத்தாலியா நிறுவனத்தில் பணியாற்றியவர்களில் 3000 இற்கு குறைந்த எண்ணிக்கையானோரே புதிய நிறுவனத்தினால் மீண்டும் சேவைக்கு அழைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் வேலை இழந்த விமானப் பணிப்பெண்களில் பலர் மேற்படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ரோம் நகர மத்தியிலுள்ள வீதியில், தமது சீருடையுடன் வரிசையாக நின்ற மேற்படி பெண்கள் வீதியில் வைத்தே தமது ஆடைகளை களைந்து உள்ளாடையுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அல் இத்தாலியா நிறுவனத்தின் கடைசி விமானம் கடந்த 14 ஆம் திகதி பறந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை 2800 பேருடன் சேவையை ஆரம்பித்துள்ள ஐ.ரி.ஏ. எயார்வேஸ் நிறுவனம் 2025 ஆம் ஆண்டில் தனது ஊழியர்களின் எண்ணிக்கையை 5750 ஆக அதிகரிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளது.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  மாணவ சிறுமி ஒருவருக்கு வித்தியாசமாக ஆங்கிலம் கற்பித்து சிக்கலில் மாட்டிய ஆசிரியர்
Previous article8 ஆண்டுகளாக ‘ஐ லவ் யூ’ கூறவில்லை என காதலன் மீது வழக்கு தொடர்ந்த காதலி
Next articleஇன்றைய ராசிபலன் – 07/11/2021, விருச்சிக ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்