Home world news 8 ஆண்டுகளாக ‘ஐ லவ் யூ’ கூறவில்லை என காதலன் மீது வழக்கு தொடர்ந்த காதலி

8 ஆண்டுகளாக ‘ஐ லவ் யூ’ கூறவில்லை என காதலன் மீது வழக்கு தொடர்ந்த காதலி

8 ஆண்டுகளாக தன்னுடன் உறவிலிருக்கும் காதலன் தன்னிடம் “ஐ லவ் யூ”  கூறவில்லை என காதலி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சம்பவம் ஒன்று அமெரிக்காவில் வைரலாக பரவி வருகிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த பெண் கேர்ட்டூட் நோக்மா 26 வயதான இவர் ஹெர்பிர்ட் சலாலிகி என்ற 28 வயது நபரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் திருமணம் செய்து கொள்ளாத நிலையில் இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் இருக்கிறார்.

இந்நிலையில், அண்மையில் கேர்ட்டூட் நோக்மா,  நீதிமன்றத்தில்  தனது காதலன் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில் அவர் தன் காதலனுக்கும் தனக்கும் ஒரு மகன் இருந்தும் அந்த மகன் மீது தன் காதலன் அக்கறையே இல்லாமல் இருக்கிறார். அவனை வளர்க்கும் பொறுப்பில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளாமல் இருக்கிறார் என குறிப்பிட்டுள்ளார். முக்கியமாக இதில் அவர் தன் காதலன் தன்னை காதலித்து வரும் 8 ஆண்டுகளில் ஒரு முறை கூட “ஐ லவ் யூ” சொன்னதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தன் காதலனுக்கு தான் ஜாம்பிய நாட்டு வழக்கப்படி வரதட்சனை கொடுத்ததாகவும் தான் தன் காதலன் தனக்கு ஒரு சிறிய மோதிரம் கூட வாங்கி கொடுத்ததில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். தன் காதலன் தனக்கு 8 ஆண்டுகளாக “ஐ லவ் யூ” சொல்லவில்லை. என காதலி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சம்பவம் வைரலாக பரவி வருகிறது.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  வில் மற்றும் அம்பு கொண்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலால் ஐவர் உயிரிழப்பு பலர் காயம்.
Previous articleசில மாதங்களில் சுமார் 1500 பெண்கள் மாயம்!
Next articleபெண்கள் ஆடையை களைந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு!