Home cinema news சமந்தாவின் பதிவு ஏற்படுத்தியுள்ள பரபரப்பு!

சமந்தாவின் பதிவு ஏற்படுத்தியுள்ள பரபரப்பு!

நான் ஒரு போராளி என நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

கணவர் நாகசைதன்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்த சமந்தா மீண்டும் படங்களில் தீவிரமாக நடிக்க ஆரம்பித்துள்ளார். டாப்சி தயாரிக்கும் இந்தி படத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. விவாகரத்து தொடர்பாக தன்னை பற்றி அவதூறு பரப்பியதாக சில யூடியூப் சேனல்கள் மீது வழக்கு தொடர்ந்தார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நாகசைதன்யாவுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் நீக்கயுள்ளார்.

சமூக வலைதளத்திலும் அடிக்கடி கருத்துகள் பதிவிட்டு வருகிறார். அண்மையில் பெற்றோர்களுக்கு அறிவுரை சொல்லும் வகையில், “உங்கள் மகளை யார் திருமணம் செய்து கொள்வார்களோ என்று கவலைப்பட வேண்டாம். அவளை திறமையானவளாக தயார் செய்யுங்கள். திருமணத்துக்கு பணம் சேர்ப்பதற்கு பதிலாக அவளது படிப்புக்கு செலவிடுங்கள்” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது புதிதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தா வெளியிட்டுள்ள பதிவில், “நான் வலிமையானவள், எதையும் தாங்கிக்கொள்பவள், நான் சரியானவள் அல்ல, எனக்கு நான் சரியானவள், நான் பின்வாங்க மாட்டேன், நான் அன்பானவள், நான் உறுதியுடன் இருக்கிறேன், நான் தீவிரமானவள், நான் மனுஷி, நான் ஒரு போராளி, எனது அம்மா சொன்னார்” என்று கூறியுள்ளார். இந்த பதிவு வைரலாகிறது.

Image

Image

Image

Image

Image

Image

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  இந்தியாவில் இருந்து ரயில்பெட்டிகள் இலங்கைக்கு வந்தன
Previous articleபயணப்பொதியில் பெண்ணின் சடலம்
Next articleசம்பந்தன், ஹக்கீம் மனோ நேரடி கலந்துரையாடல்!