Home Local news மீண்டும் அதிகரிக்கப்படுகிறது சீமேந்தின் விலை

மீண்டும் அதிகரிக்கப்படுகிறது சீமேந்தின் விலை

நாட்டில் சீமெந்தின் விலை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 50 கிலோ கிராம் சீமெந்து பொதி ஒன்றின் விலையை 177 ரூபாவினால் அதிகரிக்க  சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.

அதன்படி சீமெந்து பொதியொன்றின் புதிய விலை 1,275 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் தொடக்கத்தில் சீமெந்து பொதியொன்றின் விலை 93 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 1,093 ரூபா என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது இரண்டாவது தடவையாக சீமெந்து பொதியின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  அதிபர் - ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு துரித நடவடிக்கை - டலஸ் அழகப்பெரும
Previous articleஇன்றைய ராசி பலன் – 06.11.2021
Next articleபயணப்பொதியில் பெண்ணின் சடலம்