Home Local news 6 மாதங்களின் பின் வந்தடைந்தது யாழ்தேவி

6 மாதங்களின் பின் வந்தடைந்தது யாழ்தேவி

கொழும்பில் இருந்து – காங்கேசன்துறை வரையான  யாழ்தேவி புகையிரதம் 6 மாதங்களின் பின் இன்று (03.11) வவுனியா புகையிரத நிலையத்தை வந்தடைந்தது.

நாட்டில் கோவிட் பரம்பல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இதன்போது மாகாணங்களுக்கு இடையிலான புகையிரதப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், கொழும்பில் இருந்து காலை 5.55 இற்கு காங்கேசன்துறை நோக்கி புறப்பட்ட யாழ்தேவி புகையிரதம் வடமாகாணத்தின் முதலாவது மாவட்டமாக வவுனியாவை மதியம் 12 மணிக்கு வந்தடைந்தது.

அங்கிருந்து தனது பயணத்தை யாழ் நோக்கி ஆரம்பித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Gallery Gallery Gallery Gallery Gallery Gallery

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  பெயரை மாற்றிய சமந்தா!
Previous articleஆலயத்திற்கு வழிபட சென்ற பெண்ணின் சங்கிலி பறிப்பு; வவுனியாவில் சம்பவம்.
Next articleசுற்றுலா விடுதியொன்றில் இன்று காலை வெடிப்பு சம்பவம் (PHOTOS)