Home Local news அத்தியாவசிய பொருட்களுக்கான அதிகபட்ச சில்லறை விலைகள் நீக்கம்:

அத்தியாவசிய பொருட்களுக்கான அதிகபட்ச சில்லறை விலைகள் நீக்கம்:

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றுக்கான அதிகபட்ச சில்லறை விலைகள் நீக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

சீனி, பருப்பு, பாசிப்பயறு, நெத்தலி, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், ரின் மீன், கடலை, கோதுமை மா, கருவாடு, தேங்காய், கோழி இறைச்சி, பால்மா மற்றும் சோளம் ஆகியவற்றின் அதிகபட்ச சில்லைறை விலைகளே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளன.

சீனிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்கும் வகையில் விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று இரவு இது தொடர்பிலான விசேட வர்த்தமானி வெளியாகியுள்ளது. இதன்படி, செப்டெம்பர் 2ம் திகதி அமுல்படுத்தப்பட்ட சீனிக்கான கட்டுப்பாட்டு விலைகள் நீக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலைகளின்படி, வெள்ளை சீனி ஒரு கிலோ (பொதி செய்யப்படாத) 122 ரூபாவாகவும், பொதி செய்யப்பட்ட ஒரு கிலோ வெள்ளை சீனி 125 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட்டன.

அத்துடன், பொதி செய்யப்படாத ஒரு கிலோ சிவப்பு சீனியின் விலை 125 ரூபாவாகவும், பொதி செய்யப்பட்ட ஒரு கிலோ சிவப்பு சீனி 128 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், குறித்த விலைக்கட்டுப்பாட்டை இரத்து செய்து விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Gallery

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை பொதுமக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை
Previous articleஇன்றைய ராசி பலன் – 04.11.2021
Next articleஆலயத்திற்கு வழிபட சென்ற பெண்ணின் சங்கிலி பறிப்பு; வவுனியாவில் சம்பவம்.