Home CRIME NEWS வெற்றிலை துப்பியவரை சுட்டுக் கொன்ற அதிர்ச்சியான சம்பவம்!

வெற்றிலை துப்பியவரை சுட்டுக் கொன்ற அதிர்ச்சியான சம்பவம்!

இந்தியாவில் மாடியில் இருந்து ஜன்னல் வழியாக வெற்றிலை துப்பியவரை இளஞர் ஒருவர் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பிஹார் மாநிலம் சிவான் மாவட்டம் புரானி குய்லா என்ற இடத்தில் இஷான் மாலிக் என்பவர் வாடகை வீட்டில் வசித்து வந்தார். குறித்த நபர் சாலையோரம் ரெடிமேட் துணிகளை வியாபாரம் செய்பவர் என்றும், அவருக்கு வெற்றிலை போடும் பழக்கம் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாலிக், வீட்டில் வெற்றிலையை வாயில் போட்டு குதப்பியவாறே மாடியில் இருந்து ஜன்னல் வழியேயாக அதனை துப்பியுள்ளார்.

இதன்போது, அவர் துப்பிய எச்சில் எதேச்சையாக கீழே சாலையில் சென்று கொண்டிருந்த அப் பகுதியைச் சேர்ந்த கோலு மியான் என்ற இளைஞர் மீது விழுந்தது.

இதன் காரணமாக , கடும் கோபமடைந்த இளைஞர் கோலு மியான் மிகவும் கோபத்துடன் மாடிக்கு சென்று, மாலிக்கை தன்னிடம் இருந்த நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இதனையடுத்து வெடிச்சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் இஷான் மாலிக்கை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது , ஏற்கெனவே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் தப்பிச் சென்ற மியானை கைது செய்து பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி வருகின்றதாகவும் கூறப்படுகின்றது.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  மேலும் இருவாரத்திற்கு நீடியுங்கள்; ரணில் கோரிக்கை
Previous articleபொலிசார் ஆடையின்றி மண்டியிட வைத்தனர்; ஜனாதிபதிக்கு சென்ற சர்ச்சை கடிதம்!
Next articleசினிமாவை மிஞ்சிய கடத்தல் சம்பவம்