Home Astology இன்றைய ராசி பலன் – 03.11.2021

இன்றைய ராசி பலன் – 03.11.2021

பிலவ வருடம் ஐப்பசி 17 ஆம் தேதி நவம்பர் 03 ,2021 புதன்கிழமை. திரயோதசி திதி காலை 09.02 மணி வரை அதன் பின் சதுர்த்தசி திதி மறுநாள் காலை 06.03 மணிவரை. ஹஸ்தம் நட்சத்திரம் காலை 09.58 மணிவரை அதன் பின் சித்திரை நட்சத்திரம். சந்திரன் இன்றைய தினம் கன்னி ராசியில் பயணம் செய்கிறார். கும்ப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள், பரிகாரங்களைப்பார்க்கலாம்.

மேஷம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும். பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சிகளைச் செய்யலாம் வெற்றிகரமான நாளாக அமைந்துள்ளது.

ரிஷபம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று வீட்டில் நெருங்கிய உறவினர்களால் உங்களுக்கு மன உளைச்சல்கள் ஏற்படலாம். தொழில் ரீதியான வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது. பண வரவு வரும் பொருளாதார ரீதியாக பண நெருக்கடிகள் நீங்கும். வேலை செய்யும் இடத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

மிதுனம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று வியாபாரத்தில் பணவரவு சுமாராக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். உறவினர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும். கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம் விட்டுக்கொடுத்து செல்லவும்.

READ MORE >>>  இன்றைய ராசி பலன் - 29.10.2021

கடகம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் நீங்கும். வீட்டிற்குத் தேவையான புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும்.

சிம்மம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்கள் உடல் நிலையில் ஏற்பட்டிருந்த சோர்வும், மந்த நிலையும்நீங்கும். பிள்ளைகளுக்காக சுப செலவுகள் செய்வீர்கள். சுபகாரிய முயற்சிகளில் ஏற்பட்டிருந்த தடைகள் நீங்கி முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் லாபம் அதிகரிக்கும். பண வரவு அதிகரிக்கும் நிதி நெருக்கடிகள் நீங்கும். கடன் பிரச்சினைகள் நீங்கும். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

கன்னி

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்குள் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு நண்பர்கள் மூலம் சுபசெய்திகள் தேடி வரும் பிள்ளைகளுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளால் சந்தோஷம் உண்டாகும். திருமணம் சுப காரியம் தொடர்பாக பேச வெற்றி கிடைக்கும். பழைய கடன்கள் வசூலாகும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வேலையில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

துலாம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிரிகளால் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் அதிக செலவுகள் ஏற்படலாம். பண விசயத்தில் கவனத்துடனும் பொறுப்புடனும் செயல்பட்டால் வீண் செலவுகளைத் தவிர்க்கலாம்.

READ MORE >>>  இன்றைய ராசிபலன் - 11.08.2021

விருச்சிகம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். புதிய முயற்சிகள் வெற்றியை தரும். அலுவலகத்தில் மனம் மகிழும் நிகழ்வுகள் நடைபெறும். இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். இல்லத்தரசிகளுக்கு இன்று சந்தோஷமான நாள். பிள்ளைகளால் மன மகிழ்ச்சி தரும் செய்திகள் தேடி வரும் பெண்களுக்கு ஆடை ஆபரணம் சேர்க்கை ஏற்படும்.

தனுசு

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். குடும்பத்தில் அமைதியும் நிம்மதியும் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழில் வியாபாரம் அமோகமாக இருக்கும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். சுபகாரியங்கள் கைகூடி வரும்.
வேலை செய்யும் இடத்தில் இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக அமையும்.

மகரம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் எந்த காரியத்தையும் துணிச்சலுடன் செய்து முடிப்பீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த வங்கி கடன் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். வீட்டிற்கு வரும் உறவினர்களால் மன சங்கடங்கள் ஏற்படலாம். குடும்ப விசயங்களை வெளியாட்களிடம் பேசாமல் இருப்பது நல்லது.

கும்பம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற மனகுழப்பம் ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. இரவு நேரங்களில் வாகன போக்குவரத்தை தவிர்த்து விடவும்.வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை செய்ய வேண்டாம். வேலை விசயங்களில் கவனமும் விழிப்புணர்வும் தேவை.

READ MORE >>>  துலாம் ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள்

மீனம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும் நிதி நெருக்கடிகள் நீங்கும். இன்று உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

Previous articleசூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படத்திற்கு அமோக வரவேற்பு
Next articleதங்கத்தின் விலையில் வீழ்ச்சி!