Home Astology இன்றைய ராசி பலன் – 02.11.2021

இன்றைய ராசி பலன் – 02.11.2021

பிலவ வருடம் ஐப்பசி 16 ஆம் தேதி நவம்பர் 02 ,2021 செவ்வாய்க்கிழமை. துவாதசி திதி பகல் 11.31 மணி வரை அதன் பின் திரயோதசி திதி. உத்திரம் பகல் 11.44 மணிவரை அதன் பின் ஹஸ்தம். சந்திரன் இன்று கன்னி ராசியில் பயணம் செய்கிறார். கும்ப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்

இன்றைய தினம் சந்திரன் சஞ்சாரம் ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் உள்ளது. இன்று பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். ஏழாம் வீட்டில் ராசி நாதன் செவ்வாய் பயணம் செய்கிறார். உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் உண்டாகும். உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வங்கி சேமிப்பு உயரும்.

ரிஷபம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். ராசிநாதன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் துணிச்சலுடன் எந்த காரியத்தையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். வேலையில் பணியாட்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

மிதுனம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். பிள்ளைகளால் ஏற்பட்ட மன உளைச்சல் நீங்கும். பண வரவை விட செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகளால் ஏற்பட்ட கவலைகள் நீங்கும். வெளியூர் பயணங்களில் கவனம் தேவை. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.

READ MORE >>>  இன்றைய ராசிபலன் - 08/11/2021, மிதுன ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்

கடகம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்தில் பயணம் செய்கிறார்.
இன்று நீங்கள் ஆன்மீக காரியங்களில் ஈடுபட்டு மனம் ஆனந்தம் அடைவீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். அரசு வழியில் அனுகூலப் பலன் கிட்டும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். புதிய பொருள் சேரும்.

சிம்மம்

சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உறவினர்களால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.குடும்ப செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கன்னி

சந்திரன் இன்று உங்கள் ராசிக்குள் பயணம் செய்கிறார். தடைப்பட்ட சுபகாரியம் கைகூடும். உற்றார் உறவினர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடித்து வெற்றி அடைவீர்கள். தொழில் சம்பந்தமான வங்கி கடன் எளிதில் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

துலாம்

சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு உடலில் சிறுசிறு உபாதைகள் ஏற்படலாம். குடும்பத்தில் உள்ளவர்களின் அதிருப்திக்கு ஆளாகக்கூடும். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு நம்பிக்கையை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கடன் பிரச்சினைகள் குறையும்.

விருச்சிகம்

சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். திருமண சுபகாரியங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். இன்று உங்களுக்கு தொழில் ரீதியாக புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும்.

READ MORE >>>  இன்றைய ராசி பலன் - 19.10.2021

தனுசு

சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். உத்தியோக ரீதியாக வெளிவட்டார நட்பு உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீர்ந்து சுமுக நிலை ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அனுகூலப்பலன் கிட்டும். உற்றார் உறவினர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள்.

மகரம்

சந்திரன் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் அப்பாவின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். மருத்துவ செலவுகள் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் வீண் பிரச்சினைகளை தவிர்க்க உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. இன்றைய தினம் சுப காரிய பேச்சுவார்த்தைகளை தொடங்கலாம். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.

கும்பம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு எட்டாம் வீடான அஷ்டம ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் சிறு சஞ்சலங்கள் வாக்குவாதங்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் மேலதிகாரிகளுடன் பேசும் பொழுது நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்.செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். சுபகாரியங்களை தவிர்க்கவும். பெரிய அளவில் முதலீடுகளைத் தவிர்க்கவும்.

மீனம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். இன்று குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். உடல்நிலையில் புது பொலிவும், தெம்பும் உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர் பதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். மாணவர்கள் படிப்பில் தங்கள் திறமைகளை வெளிபடுத்துவார்கள். நண்பர்கள் மூலம் சுபசெய்திகள் வீடு தேடி வரும்.

READ MORE >>>  புத்தாண்டு பலன்கள் - விருச்சிக ராசி

ஏனைய தளங்களிற்கு செல்ல..

Previous articleஇன்றைய ராசிபலன் – 02/11/2021, மேஷ ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்
Next articleபுலமைப்பரிசில், க.பொ.த சாதாரணதர மற்றும் உயர்தர பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு