Home Local news 1,000 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளை கொண்டுவந்தவர் கைது!

1,000 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளை கொண்டுவந்தவர் கைது!

நான்கு ஆண்டுகளில் 1,000 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதி கொண்ட போதைப்பொருளை நாட்டுக்குள் தருவித்ததாக கூறப்படும் பிரபல பாதாள உலக குழு உறுப்பினராகவும் போதைப்பொருள் கடத்தல் மன்னனாகவும் ‘ தெமட்டகொட ருவன் ‘ எனும் பெயரால் அறியப்படும் ருவன் சமில பிரசன்னவை எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கறுப்புப் பண சுத்திகரிப்பு சட்டத்தின் கீழ், சிஐடி எனும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பிலான விசாரணைப் பிரிவினாரால் கைது செய்யப்பட்ட தெமட்டகொட ருவன், கொழும்பு மேலதிக நீதிவான் லோச்சனீ அபேவிக்ரம முன்னிலையில், நேற்று (30) ஆஜர் செய்யப்பட்டபோது இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தெம்மட்டகொட ருவனின் சட்ட விரோத சொத்துக்கள் என சந்தேகிக்கப்படும் தற்போதைக்கு கைப்பற்றப்பட்டுள்ள 4 வாகனங்கள் மட்டும் 18 கோடி ரூபாவையும் தாண்டிய பெறுமதியைக் கொண்டுள்ளமையையும், அவற்றை கொள்வனவு செய்வதற்கான சட்ட ரீதியிலான இயலுமை தெமட்டகொட சமிந்தவுக்கு உள்ளதா என்பதும் நியாயமான சந்தேகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால், அது குறித்த விசாரணைகள் தொழில்நுட்ப ரீதியாகவும் சூட்சுமமாகவும் முன்னெடுக்கப்பட வேண்டியது என்பதால் அவரை விளக்கமறியலில் வைப்பது சிறந்தது என தீர்மானித்தே மேலதிக நீதிவான் லோச்சனீ அபேவிக்ரம மேற்படி உத்தரவை பிறப்பித்தார்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  சிவப்பு பட்டியலில் இலங்கை; மாதத்திற்கு 5000 மரணங்கள் பதிவாகலாம்!
Previous articleகோட்டாபய தங்கியிருந்த விடுதியைச் சூழ்ந்துகொண்ட புலம்பெயர் தமிழர்கள்
Next articleபுனித் ராஜ்குமார் உதவியில் கற்று வரும் 1,800 மாணவர்களின் கல்விச் செலவை ஏற்றார் விஷால்!