Home Accident News கார் விபத்தில் பலியான முன்னாள் அழகிகள்

கார் விபத்தில் பலியான முன்னாள் அழகிகள்

இந்திய கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே இன்று (01) இடம்பெற்ற கார் விபத்தில் முன்னாள் மிஸ் கேரளா மற்றும் அழகுராணிகள் இருவர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர்.

கேரள மாநிலம் எர்ணாகுளம் பைபாஸ் வீதியில் இன்று அதிகாலை வைற்றிலா அருகே கார் ஒன்று பைக் மீது மோதியுள்ளது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் தலைகுப்புற கவிழ்ந்து உருண்டுள்ளது. இதில் காரிலிருந்த 2019ஆம் ஆண்டு மிஸ் கேரளா பட்டம் வென்ற, ஆன்சி கபீர், (Ansi Kabeer) (25 வயது), அழகி போட்டியில் இரண்டாவது ரன்னர்-அப் பட்டம் வென்ற அஞ்சனா ஷாஜன் (Anjana Shajan) ( 26 வயது) ஆகியோர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

It's time to go... reads Ansi's last post hours before she was killed in accident | Ansi Kabeer and Anjana Shajan killed in road accident| last post on Instagram

ஆன்சி கபீர் திருவனந்தபுரம் மாவட்டம், ஆட்டிங்கள் அருகே உள்ள ஆலங்கோடு பகுதியைச் சேர்ந்தவர். அஞ்சனா ஷாஜன் திருச்சூர் பகுதியைச் சேர்ந்தவராவார்.

அஞ்சனா ஒரு ஆயுர்வேத மருத்துவர். அவருக்கு மொடலிங்கில் முன் அனுபவம் இல்லை. மிஸ் கேரளா முதல் ரன்னர்-அப் பட்டத்தை வென்றார்.

அவர்களுடன் காரில் பயணம் செய்த, அவர்களது நண்பர்களான , முகமது ஆசிக் (30), அப்துல் ரஹ்மான் (28 வயது) ஆகிய இருவரும் படுகாயமடைந்து சிகிச்சைக்காக எர்ணாகுளம் மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த வைற்றிலா காவல் நிலைய பொலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Of beauty and grace: Miss Kerala-2019 concludes, Ansi Kabeer gets crowned- The New Indian Express

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  1,600 கோழிகளை ஏற்றிச் சென்ற பாரவூர்தி விபத்து: சாரதி பலி!
Previous articleகல்முனையை சோகத்தில் ஆழ்த்தியுள்ள இளைஞனின் இழப்பு!
Next articleவாகன விலைகளில் திடீர் சரிவு!