Home Local news பாலியல் கடத்தல் கும்பலிடம் சிக்கிய இந்தோனேசியப் பெண்கள்

பாலியல் கடத்தல் கும்பலிடம் சிக்கிய இந்தோனேசியப் பெண்கள்

கல்கிசை பகுதியில்விபச்சார விடுதியொன்றில் இருந்து இந்தோனேசிய பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கல்கிசை பகுதியில் உள்ள விபசார விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்போது விபசார கடத்தல் கும்பலிடம் சிக்கிய 5 இந்தோனேஷியா பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பாலியல் கடத்தல் கும்பலால் பாதிக்கப்பட்ட ஐந்து பெண்களும், சர்வதேச நட்சத்திர ஹோட்டல்களில் வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். எவ்வாறாயினும், பெண்கள் நாட்டுக்கு வந்தவுடன், அவர்களின் கடவுச்சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு, தெஹிவளை மற்றும் கல்கிஸையில் அமைந்துள்ள விபச்சார விடுதிகளில் பாலியல் தொழிலில் ஈடுபடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட குறித்த பெண்கள் கல்கிசை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது அவர்களை பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.

பாலியல் வன்கொடுமை தொடர்பாக விசாரணை நடத்துமாறும், பாதிக்கப்பட்டவர்களின் கடவுச்சீட்டை நீதிமன்றக் காவலில் எடுத்து அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். குறித்த பெண்கள் விபச்சார சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  கம்பகாவில் சிகிச்சை இன்றி தவிக்கும் 7000 கொவிட் நோயாளிகள்;
Previous articleமாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டு நீக்கப்பட்டது!
Next articleவைத்தியசாலையில் இருந்த பெண்ணை பார்க்கச் சென்ற இளைஞன் தற்கொலை முயற்சி!