Home Local news வவுனியா வடக்கு சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்

வவுனியா வடக்கு சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்

வவுனியா வடக்கு சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியால் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

வவுனியா பேருந்து நிலையப் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் குறித்த துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

வவுனியா வடக்கில் இனபரம்பலை மாற்றியமைக்கும் வகையில் அரசாங்கம் முன்னெடுக்கும் குடியேற்றங்களால் தமிழ் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து  இதன்போது கட்சி உறுப்பினர்களால் வர்த்தகர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

Gallery Gallery Gallery Gallery

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  இலங்கையில் பரவுவது சூப்பர் டெல்டா! - வைத்தியர் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!
Previous articleகொரோனா வைரஸின் புதிய திரிபு அடையாளம் காணப்பட்டது!
Next articleமாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டு நீக்கப்பட்டது!