Home world news மனைவியின் கொடுமை தாங்க முடியாமல் பொலிசாரிடம் சிறையில் அடைக்க கோரிய கணவன்!

மனைவியின் கொடுமை தாங்க முடியாமல் பொலிசாரிடம் சிறையில் அடைக்க கோரிய கணவன்!

மனைவி தொல்லை தாங்க முடியவில்லை என்றும் தன்னை சிறையில் அடைக்குமாறும் இத்தாலிய நபர் ஒருவர் பொலிஸாரிடம் விநோத கோரிக்கையை வைத்திருக்கும் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இத்தாலியின் ரோம் நகரை ஒட்டிய கைடோனியா மாண்டெசெலியோ எனும் நகரில் வசித்து வரும் அல்பேனிய வம்சாவளியைச் சேர்ந்த 30 வயதாகும் நபர் ஒருவரே, இவ்வாறு கோரிக்கையுடன் பொலிஸ் நிலையத்துக்கு சென்றுள்ளார்.

இது குறித்து பொலிஸ் அதிகாரியான ஜியாகொமோ ஃபெரண்ட் கூறுகையில், “30 வயதாகும் அந்த நபர் போதைப் பொருள் தொடர்பான குற்றத்துக்காக வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அந்த நபர் ஏற்கனவே பல மாதங்களாக வீட்டுச் சிறையில் இருந்து வருகிறார், அவரின் தண்டனை காலம் முடிவதற்கு மேலும் பல ஆண்டுகள் உள்ளன.

இந்நிலையில் குடும்பத்துடன் வாழ்ந்து வந்த அந்த நபர் தனது வீட்டில் இருந்து திடீரென தப்பித்து பொலிஸ் நிலையத்துக்கு சென்று பொலிஸாரை சந்தித்து, இனிமேலும் என்னால் வீட்டில் இருக்க முடியாது, என்னுடைய மனைவியின் கொடுமையை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை. வீடு எனக்கு நரகம் போலுள்ளது.

இனிமேலும் என்னால் என் மனைவியுடன் ஒன்றாக இருக்க முடியாது. தயவு செய்து என்னை சிறையில் அடைத்து விடுங்கள். என்னுடைய தண்டனை காலத்தை நான் சிறையிலேயே கழிக்கிறேன்” என எங்களிடம் (பொலிஸ்) கோரிக்கை வைத்தார்.

ஆனால், அவர் வீட்டில் இருந்து தப்பித்ததால் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர் கோரியது போலவே சிறையில் அடைத்துவிட்டோம் என தெரிவித்துள்ளார்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  15 மனைவிகள்.. 100 குழந்தைகள்.. ஒவ்வொரு ஆண்டும் ஒரு பெண்ணை திருமணம் செய்யும் மன்னர்!
Previous articleஏனைய வகுப்புக்களுக்கான கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பம் : திகதி வெளியானது
Next articleகிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற பயங்கர விபத்து