Home Indian news YouTube பார்த்து குழந்தை பெற்றெடுத்த மாணவி

YouTube பார்த்து குழந்தை பெற்றெடுத்த மாணவி

YouTube பார்த்து பிளஸ்-2 மாணவியொருருவர் தனக்குதானே பிரசவம் பார்த்து குழந்தை பெற்ற சம்பவம் இந்திய கேரளா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம், கூட்டக்கல் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி அந்த பகுதியில் உள்ள பாடசாலையில் பிளஸ்- 2 படித்து வருகிறார்.

இந்த மாணவியின் தந்தை அருகில் உள்ள ஊரில் இரவு நேர காவலாளியாக பணி புரிந்து வருகிறார். தாயாருக்கு பார்வை குறைபாடு உள்ளது.

‘யூடியூப்’ பார்த்து குழந்தை பெற்றெடுத்த பிளஸ்-2 மாணவி: 3 நாட்களுக்கு பிறகு கண்டுபிடித்த பெற்றோர்

மாணவியின் வீடு அருகே 21 வயது இளைஞர் வசித்து வருகிறார். அவருடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டதையடுத்து, இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து கொண்டனர். அப்போது இளைஞர் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியதால் மாணவி, அந்த இளைஞனுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதில் அவர் கர்ப்பமடைந்துள்ளார்.

மாணவி, இத்தகவலை பெற்றோரிடம் கூறாமல் மறைத்துள்ள அதே நேரம் தனக்கு உடல் நிலை சரியில்லை என்று மட்டும் கூறியுள்ளார். பெற்றோரும் அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனைகளில் மாணவி கர்ப்பமாக இருப்பதை யாரும் கண்டுபிடிக்கவில்லை.

இந்த நிலையில் மாணவி நிறைமாத கர்ப்பிணி ஆனார். கடந்த 20ஆம் திகதி மாணவிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. என்ன செய்வது என்று யோசித்த மாணவி, பிரசவம் பார்ப்பது எப்படி? என்பது பற்றி YouTube பில் பார்த்தார்.

கோப்புப்படம்

பின்னர் அவர் வீட்டின் மாடியில் உள்ள அறைக்கு சென்று கதவை உட்பக்கமாக பூட்டி கொண்டார். அங்கு YouTube ப்பில் பார்த்த தகவல்களின் அடிப்படையில் அவரே தனக்குதானே பிரசவம் பார்த்து கொண்டார்.

READ MORE >>>  ‘படுக்கை ஆய்வாளர்’ பணிக்கு 24,000 பவுண்கள் சம்பவளம்!

இதில் அவருக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்த பின்பு மாணவியே தனது தொப்புள் கொடியை அறுத்து குழந்தையை எடுத்து கொண்டார்.

பிரசவம் முடிந்த பின்பு வீட்டில் வழக்கம் போல் நடமாடிய மாணவி அடிக்கடி வீட்டின் மேல் மாடிக்கு செல்வதை கண்ட பெற்றோர் சந்தேகமடைந்தனர். அப்போது அந்த அறையில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. உடனே பெற்றோர், மாணவியின் அறைக்குள் சென்று பார்த்தபோது அங்கு குழந்தை இருப்பதை கண்டுள்ளனர்.

அதிர்ச்சியடைந்த பெற்றோர், மாணவியிடம் அதட்டி கேட்டபின்னர், அவர் பக்கத்து வீட்டு இளைஞனால் கர்ப்பமானதையும், அதன்பின்பு தனக்கு தானே பிரசவம் பார்த்து கொண்டதையும் கூறி அழுதுள்ளார்.

இதையடுத்து மாணவியின் பெற்றோர், அவரை மஞ்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது மாணவியும், அவரது குழந்தையும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை அதிகாரிகள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் பொலிஸார் மாணவியிடமும், அவரின் பெற்றோரிடமும் விசாரணை நடத்தியுள்ளனர்.

பின்னர் மாணவியை கர்ப்பம் ஆக்கிய இளைஞனை போக்சோ வழக்கில் கைது செய்துள்ளனர்.

YouTube பார்த்து பிளஸ்-2 மாணவி ஒருவர் தனக்குதானே பிரசவம் பார்த்து குழந்தை பெற்ற சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

Previous articleசுகாதார தொண்டர்களுக்கு விரைவில் நிரந்தர நியமனம்:
Next articleபொலிவூட் படத்தில் நயன்தாராவுக்கு பதிலாக சமந்தா?