Home world news பிரித்தானிய நபரின் உடலிலிருந்து அகற்றப்பட்ட உலக சாதனை அளவு சிறுநீரகங்கள்!

பிரித்தானிய நபரின் உடலிலிருந்து அகற்றப்பட்ட உலக சாதனை அளவு சிறுநீரகங்கள்!

பிரிட்டனைச் சேர்ந்த ஒருவரின் உடலிலிருந்து பாரிய சிறுநீரகங்களை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

இச்சிறுநீரகங்களின் மொத்த எடை 35 கிலோகிராம் (77 இறாத்தல்) ஆகும்.

வொரன் ஹிக்ஸ் என்பவரின் உடலிலேயே இப்பிரமாண்ட சிறுநீரகங்கள் காணப்பட்டன.

இங்கிலாந்தைச் சேர்ந்த வொரன் ஹிக்ஸ் ஒரு பிள்ளையின் தந்தையாவார். நோய் ஒன்றின் காரணமாக அவரின் சிறுநீரகம் வீக்கமடைய ஆரம்பித்தது. அவரின் சிறுநீரகங்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவை உலக சாதனை அளவுடையதாக வளர்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்தனர்.

ஹிக்ஸின் மிகப் பெரிய சிறுநீரகம் 15 கிலோகிராம் (33 இறாத்தல்) ஆகும். அதற்கு மேல் 5 கிலோகிராம் அளவிலான திரவமொன்றும் காணப்பட்டது.

இதற்கு முன் இந்தியாவைச் சேர்ந்த ஒருவரிடம் காணப்பட்ட 7.4 கிலோகிராம் எடையுடைய சிறுநீரகமே உலக சாதனை அளவுடைய மனிதச் சிறுநீரகமாக இருந்தது.

வொரண் ஹிக்ஸின் பாரிய சிறுநீரகங்கள் அவரின் நுரையீரலை அழுத்த ஆரம்பித்திருந்த நிலையில் அவற்றை அகற்ற வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். அவரின் வயிறும் அதிகளவு வீங்கியிருந்தது.

சத்திரசிகிச்சையின் பின்னர் வொரன் ஹிக்ஸ்

ஒக்ஸ்போர்ட் நகரிலுள்ள சர்ச்சில் வைத்தியசாலையில் 2 மணித்தியாலங்கள் நீடித்த சத்திரசிகிச்சை மூலம் இச்சிறுநீரகங்கள் அகற்றப்பட்டன.

சத்திரசிகிச்சையின் பின்னர் ஹிக்ஸின் வயிறு சுருங்க ஆரம்பித்தது. தற்போது அவர் உடற்பயிற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார். அடுத்த வருடம் ட்ரையத்லன் போட்டியொன்றில் பங்குபற்றுவதற்கும் அவர் திட்டமிட்டுள்ளார்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  40 ஆண்டுகளாக உறங்காத பெண்; நடந்தது என்ன?
Previous articleகல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு;
Next articleசுகாதார தொண்டர்களுக்கு விரைவில் நிரந்தர நியமனம்: