Home Astology இன்றைய ராசி பலன் – 30.10.2021

இன்றைய ராசி பலன் – 30.10.2021

பிலவ வருடம் ஐப்பசி 13 ஆம் தேதி அக்டோபர் 30,2021 சனிக்கிழமை,நவமி திதி பகல் 02.43 மணி வரை அதன் பின் தசமி திதி,ஆயில்யம் பகல் 12.51 மணிவரை அதன் பின் மகம் நட்சத்திரம். சந்திரன் இன்றைய கடகம், சிம்ம ராசிகளில் பயணம் செய்கிறார். தனுசு மற்றும் மகர ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கும் பரிகாரம் என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.

மேஷம்

சந்திரன் சஞ்சாரம் சாதகமாக உள்ளது. உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். குடும்பத்தில் மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகள் பெருமை சேர்க்கும் வகையில் நடந்து கொள்வார்கள். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். நினைத்த காரியம் நிறைவேறும்.

ரிஷபம்

சந்திரன் பயணம் சாதகமான இடங்களில் இருப்பதால் உங்களுக்கு உடலில் சுறுசுறுப்பு கூடும். உடல்நிலை சீராக இருக்கும். பெண்களுக்கு வீட்டில் பணிச்சுமை குறையும். இன்று நீங்கள் எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பிள்ளைகள் பெருமைப்படும் படி நடந்து கொள்வார்கள். குடும்பத்தில் சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

மிதுனம்

சந்திரன் முயற்சி ஸ்தானத்திற்கு செல்கிறார். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகலாம். உடல் ஆரோக்கியத்தில் சுறுசுறுப்பு கூடும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் காணலாம். நண்பர்களின் சந்திப்பு நன்மையை தரும்.

READ MORE >>>  இன்றைய ராசிபலன்- 02/07/2021, துலாம் ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்

கடகம்

சந்திரன் உங்கள் ராசிக்குள் பிற்பகல் வரை பயணம் செய்கிறார். இன்று புதிய பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பிற்பகலுக்கு மேல் சந்திரன் உங்கள் ராசிக்கு வருகிறார். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே ஒற்றுமை கூடும். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

சிம்மம்

சந்திரன் உங்கள் ராசிக்குள் வருகிறார். குடும்பத்தில் சில சலசலப்புகள் வரலாம். நெருங்கியவர்கள் மூலம் வீண் பிரச்சினைகள் வரலாம். தேவையற்ற செலவுகளால் சேமிப்பு குறையும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் ரீதியாக புதிய முயற்சிகளுக்கு நண்பர்களின் உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும்.

கன்னி

சந்திரன் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்திற்கு வருகிறார். இன்று குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். நண்பர்கள் உங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். பெரிய மனிதர்களின் அறிமுகம் ஏற்படும். பிள்ளைகளால் மனம் மகிழும் செய்திகள் வந்து சேரும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட திட்டங்கள் நிறைவேறும். சுப செலவுகள் அதிகரிக்கும்.

துலாம்

சந்திரன் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்திற்கு வருகிறார். இன்று குடும்பத்தில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும். சுபசெலவுகள் செய்ய நேரிடும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவிகள் கிடைக்கும். அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

விருச்சிகம்

சந்திரன் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டிற்கு வருகிறார். வேலையில் மற்றவர்களிடம் விட்டு கொடுத்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வியாபாரத்தில் வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். மனைவி வழி உறவினர்களால் அனுகூலங்கள் உண்டாகும். இன்று நீங்கள் எந்த செயலையும் செய்து முடிக்க கடின உழைப்பு தேவை.

READ MORE >>>  கடக ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்று

தனுசு

சந்திரன் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். உங்கள் ராசிக்கு பகல் 12.51 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் பொறுமை தேவை. இன்று பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படலாம். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மதியத்திற்கு பின் சுப முயற்சிகளை செய்வது உத்தமம். பிரச்சினைகளும் ஓரளவு குறையும்.

மகரம்

சந்திரன் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டிற்கு வருகிறார். இன்று உங்கள் ராசிக்கு பகல் 12.51 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் தேவையில்லாத மன சங்கடங்கள் ஏற்படும். செய்யும் செயல்களில் தாமதங்கள் உண்டாகும். உற்றார் உறவினர்களுடன் பேசும் பொழுது நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். பயணங்களை தவிர்க்கவும்.

கும்பம்

சந்திரன் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டிற்கு வருகிறார். இன்று புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் சந்தோஷம் உருவாகும். உடன் பிறந்தவர்களிடம் சுமூக உறவு ஏற்படும். பிள்ளைகளின் செயல்களில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். வெளியூர் பயணங்களால் தொழிலில் நல்ல லாபம் அதிகரிக்கும்.

மீனம்

சந்திரன் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டிற்கு வருகிறார். இன்று பணவரவு அமோகமாக இருக்கும். நண்பர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பூர்வீக சொத்துக்கள் விற்பனையால் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் விஷயமாக வெளி மாநிலத்தவர் நட்பு ஏற்படும். பெண்களுக்கு ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

READ MORE >>>  இன்றைய ராசி பலன் - 17.01.2022

ஏனைய தளங்களிற்கு செல்ல..

Previous articleபொலிஸ் அதிகாரியின் சடலம் நீர்த்தாங்கியில் இருந்து மீட்பு!
Next article31ம் திகதி துக்க தினமாக அரசாங்கம் அறிவிப்பு