Home world news செய்தி அறிக்கையில் திடீரென ஒளிபரப்பாகிய ஆபாசப்படம்!

செய்தி அறிக்கையில் திடீரென ஒளிபரப்பாகிய ஆபாசப்படம்!

அமெரிக்காவின் தொலைக்காட்சி அலைவரிசையொன்றில் செய்திகளின்போது தற்செயலாக ஆபாசப் படம் ஒளிபரப்பாகியமைய சம்பவம் அண்மையில் இடம்பெற்றது.

KREM 2 எனும் அலைவரிசையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி செய்தி ஒளிபரப்பில், வானிலை தொடர்பான செய்திகள் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தன. வானிலை ஆய்வாளர் மிஷெல் பொஸ், வானிலை தகவல்களை தெரிவித்துக் கொண்டிருந்தபோது, அவரின் பின்னால் இருந்த திரையில் திடீரென ஆபாசப்படம் ஒளிபரப்பாகியது. 13 விநாடிகள் (செக்கன்கள்) இந்த ஆபாச வீடியோ ஒளபரப்பாகியது. இது குறித்து பொலிஸாருக்கும் சிலர் தகவல் தெரிவித்தனர்.

தொலைக்காட்சியொன்றில் ஆபாசவீடியோ ஒளிபரப்பாகியதாக மாலை 6.30 மணியளவில் பொலிஸாருக்கு தொலைபேசி மூலம் தெரிவிக்கப்பட்டது என பொலிஸார் விடுத்த அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து தாம் விசாரணை நடத்தவுள்ளதாகவும், இவ்விடயத்தில் குறித்த தொலைக்காட்சி நிறுவனம் ஒத்துழைப்புடன் நடந்துகொள்வதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, தமது அலைவரிசையில் ஆபாசக்காட்சிகள் ஒளிபரப்பானமை குறித்து இரவு 11 மணி செய்தி அறிக்கையில் நேயர்களிடம் தான் மன்னிப்பு  கோரியதாக மேற்படி நிறுவனத்தின் உப தலைவர் ஆன் பென்ட்லி தெரிவித்துள்ளார்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  உயரத்தில் இருந்து கீழே விழுந்த தம்பதிகள்
Previous articleரித்திகா சிங்கின் கவர்ச்சி போட்டோஷூட்
Next articleசட்டவிரோத மதுபான விற்பனையை தடுக்கச் சென்ற பொலிசார்மீது தாக்குதல்!