Home Local news புதையல் தோண்ட முயற்சித்தவர்கள் கைது!

புதையல் தோண்ட முயற்சித்தவர்கள் கைது!

திருகோணமலை – தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோயிலடி பகுதியில் புதையல் தோண்டும் நோக்குடன் பயணித்த பத்து பேரைக் கைது செய்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று (28) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

தம்பலகாமம் பொலிஸார் கோயிலடி பகுதியில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது முச்சக்கர வண்டியில் பயணித்த மூவரை ஸ்கேனர் இயந்திரத்துடன் கைது செய்யப்பட்ட போது அவர்களிடமிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் மற்றைய நபர்களையும் கைது செய்துள்ளதாகத் தெரியவருகின்றது.

குறித்த சந்தேக நபர்கள் கந்தளாய் முள்ளிப்பொத்தானை குளியாப்பிட்டிய, குருநாகல் ஹம்பாந்தோட்டை பகுதிகளைச் சேர்ந்த 25 வயதுக்கும் 45 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள் 10 பேரையும் தம்பலகாமம் பொலிஸார் விசாரணை செய்து வருவதுடன், குறித்த சந்தேக நபர்களை கந்தளாய் நீதிமன்றில் முன்னிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  வானிலிருந்து வந்த மர்ம பொருளால் பரபரப்பு!
Previous articleஇலங்கையிலிருந்து கொண்டுசெல்லப்பட்ட உலகின் மிகப் பெரிய இரத்தினக்கல்!
Next articleமுச்சக்கரவண்டி சாரதியிடம் இலஞ்சம் பெற்ற மூன்று போக்குவரத்து பொலிஸார் பணிநீக்கம்